எத்தனை முறை என்பதல்ல...?
மணிப்பூர் மாநிலம் இன்னும் பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்க வில்லை. ஏன் பார்வையைக் கூடத் திருப்ப வில்லை என்று நாடு முழுவதும் கடும் விமர்ச னம் எழுந்ததால் மிசோரத்துக்கும் அசாமுக்கும் செல்லும் வழியில் சில மணி நேரம் இம்பாலை தொட்டுச் சென்றார் பிரதமர் மோடி.
அப்போதும் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்லவும் இல்லை. சிலரை அழைத்து வந்து பேசி புகைப்படம் எடுத்துக் கொண்டார். வரலாறு முக்கியம் அல்லவா? அவர் மணிப்பூர் சென்று வந்தபின் மீண்டும் அங்கு கல வரம் ஏற்பட்டுள்ளது தான் இவரது பயணத்தின் விளைவு?!
இப்போது அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா என இரண்டு மாநிலங்களுக்கு திங்களன்று பிரத மர் மோடி சென்றார். அப்போது தில்லியில் இருந்து கொண்டு வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியாது என்பதால் 70 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றுள்ளேன் என்று பெருமை பேசியிருக்கிறார். அது மட்டு மின்றி சுமார் 800 முறை ஒன்றிய அமைச்சர்கள் வட கிழக்கு மாநிலங்களுக்கு வருகை தந்துள்ளனர் என்றும் தனது ‘அக்கறையை’ வெளிப்படுத்தி யிருக்கிறார்.
இவர் சென்று வந்தாலே அந்த மாநிலம் வளர்ச்சி பெற்று விடுவது போல அளந்து விட்டிருக்கிறார். இன்றும் அந்த மாநிலங்களின் பிரச்சனைகள் தீரவில்லை என்பதும் அமை தியின்மை மாறவில்லை என்பதையும் மறைத்து விட முயல்கிறார். கடந்த மக்களவைத் தேர்தலின் போது தானே கடவுளின் அவதாரம் போல் பேசிய வர் தற்போது மக்களே கடவுள் என்கிற நிலைக்கு இறங்கியிருக்கிறார்.
பொதுவாக வடகிழக்கு மாநிலங்களை ‘ஏழு சகோதரிகள்’ என்றழைப்பதே மரபாக இருந்தது. அதை மோடி ‘அஷ்ட லட்சுமி’ என்று புது நாமம் சூட்டுகிறார். இதற்குப் பின்னால் ஆர்எஸ்எஸ் சின் இந்துத்துவா ரகசிய அஜண்டா என்ன இருக்கிறது என்பது இனிமேல் தான் வெளிப்படும். அனைத்தையும் இந்துத்துவா பாணியில் மாற்றுவ தையே மோடி தலைமையிலான ஆட்சி செய்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.
11 ஆண்டு காலமாக இவர் தான் பிரதமராக இருந்து வருகிறார் என்பதை மறைத்துவிட்டு அதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியையே குறை கூறிக் கொண்டிருப்பது இன்னும் எத்தனை காலம் தான் செல்லுபடியாகும். ஏற்கெனவே 300க்கு மேல் இருந்த பாஜக மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 240 ஆகக் குறைந்ததே தனது ஆட்சிக்கு மக்கள் தந்த தண்டனை தான் என்பதை மறைக்கப் படாதபாடுபடுகிறார்கள்.
இப்போதே பிற கால்களின் உதவியோடுதான் பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது என்ப தை மறந்துவிட்டு 2047 வரை மோடி தான் பிர தமராக இருப்பார் என்று கூறி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நகைப்பூட்டுகிறார். ஒரு வேளை தேர்தல் ஆணையம் நமக்குத் துணையி ருக்கும் என்ற நம்பிக்கையில் தான் இப்படிச் சொல்கிறாரா? அல்லது அமித் ஷாவுக்கு போட்டி யாளராகிறாரா?