headlines

img

வசூலிக்கப்பட்ட வரியும் பிரதமர் மோடியின் தம்பட்டமும்

வசூலிக்கப்பட்ட வரியும்  பிரதமர் மோடியின் தம்பட்டமும்

ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், வருமான வரி விலக்கு மற்றும் ஜிஎஸ்டி வரி குறைப்பால் மக்களுக்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார். அப்படியென் றால் இந்தளவுக்கான தொகையை மக்களிடமி ருந்து இதுவரை ஒன்றிய அரசு அதீதமாக வசூலித்து வந்துள்ளது என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார் என்று பொருள்.

ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படும் பொழுதெல்லாம் இதற்கும் ஒன்றிய அரசுக்கும் சம்பந்தமில்லை என்றும், மாநில அமைச்சர்களும் இடம் பெற் றுள்ள ஜிஎஸ்டி கவுன்சில்தான் வரி விகிதத்தை முடிவு செய்கிறது என்றும் ஒன்றிய ஆட்சியாளர் கள் கூறி வந்தார்கள். ஆனால் வரி விகித மாற்றம் அமலாவது தன்னுடைய தனிப்பட்ட சாதனை போல பிரதமர் மோடி பீற்றிக் கொள்கிறார்.

2017ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்பட்டது. நான்கு அடுக்கு களாக 5, 12, 18, 28 சதவீதம் என பொருட்கள் மற்றும் சேவைக்கு வரி விதிக்கப்பட்டது. தற்போது ஜிஎஸ்டி 2.0 என்ற பெயரில் 5 மற்றும் 18 சதவீத வரி என இரண்டு அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது

சுதந்திர திருநாளன்று உரையாற்றிய பிரதமர், ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் செய்யப்படவிருப்பதாக வும் இது மக்களுக்கு தீபாவளி பரிசாக அமையும் என்றும் கூறினார். தற்போது நவராத்திரி பண்டிகை துவங்கும் நாளில் ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழா துவங்குகிறது என்று கூறியுள்ளார்.

நாட்டில் நடக்கும் அனைத்தையும் ஏதாவது ஒரு வகையில் மக்களின் மத நம்பிக்கையோடு முடிச்சு போடுவது மோடி அரசுக்கு வழக்கமாக உள்ளது. குடிமக்கள் தெய்வங்களைப் போன்ற வர்கள் என்பதுதான் எங்கள் அரசின் மந்திரம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அந்த ‘தெய்வங்களிடமிருந்து’ கடந்த 8 ஆண்டுகளாக வழிப்பறி செய்ததையும் அவர் ஒப்புக் கொள்ள வேண்டும்.

இந்த வரி வகித மாற்றத்தால் சிறு,குறு, நடுத்தர தொழில்துறையினர் பயன் பெறுவார்கள் என்று பிரதமர் கூறுகிறார். ஆனால் நடைமுறை யில் இந்த வரி விகித மாற்றம் பொதுமக்கள் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர்களை விட கார்ப்ப ரேட் முதலாளிகளுக்கே அதிக பலனளிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது என்ற விமர்ச னமும் எழுந்துள்ளது. 

அரிசி, கோதுமை, தானியங்கள், பென்சில், புத்தகங்கள் என அனைத்திற்கும் கடுமையான வரி விதித்ததை இந்திய மக்கள் எளிதாக மறக்க வும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். கடந்த எட்டு ஆண்டுகளில் ரூ.55 லட்சம் கோடி அளவுக்கு வசூலித்துவிட்டு தற்போது ரூ.2.5 லட்சம் கோடி மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது என்ப தையும் மறுப்பதற்கு இல்லை. மக்கள் புதிதாக எதை யும் பெறவில்லை. இதுவரை இழந்து வந்ததில் கொஞ்சம் குறைந்திருக்கிறது. இது ஒன்றிய ஆட்சி யாளர்களுக்கு வேண்டுமானால் சாதனையாக இருக்கலாம். மக்களைப் பொறுத்தவரை பறிக்கப்பட்டதே நினைவில் நிற்கும்.