states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

பாஜக தேர்தல்களில் நேர்மையாக  வெற்றி பெறவில்லை. வாக்குத் திருட்டு மற்றும் நிறுவனங்களைக்  கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே ஆட்சியில் நீடிக்கிறது. நாட்டில் வாக்குத் திருட்டு நடைபெறும் வரை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

ரொட்டி, பால் மீது ஜிஎஸ்டி இருப்பதை உணர மோடி அரசுக்கு 10 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஏழைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி இருப்பதைக் கண்டுபிடிக்க இத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொண்ட இவர்கள், வெறும் விளம்பரங்கள் மற்றும் உணர்ச்சிகள் மூலம் மட்டுமே ஆட்சி நடத்துகிறார்கள் என்பது அம்பலமாகியுள்ளது.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை அறிவித்தே தேர்தலை சந்திப்போம். யாரையும் முன்னிறுத்த முடியாத தலைவர்கள் இல்லாத பாஜகவை போல எங்கள் கட்சியும், கூட்டணியும் கிடையாது.

சிவசேனா (உத்தவ்) சஞ்சய் ராவத்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசு துணை தலைவர், தேர்தல் ஆணையர் என அனைவரையும் தங்கள் இஷ்டத்துக்கு பாஜக மாற்றுகிறது. ஆனால் பாஜகவின் தலைவரான ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் முடிந்தும், அவரை மாற்றாமல் இருக்கிறார்கள். என்ன கதை நடக்கிறது எனத் தெரியவில்லை.