states

img

தேசிய திரைப்பட விருதுகள் 2025

தேசிய திரைப்பட விருதுகள் 2025

71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்வுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றன. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகள் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜி.வி.பிரகாஷ்  சிறந்த இசைமைப்பாளராகவும் (வாத்தி), எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகராகவும் (பார்க்கிங்), ராம்குமார் சிறந்த திரைக்கதை ஆசிரியராகவும் (இயக்குநர் - பார்க்கிங்)  தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதற்கான விருதுகளை பெற்றனர்.