அமெரிக்க கனவின் கொடூர முகம்
எச்-1பி விசா கட்டணத்தை ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலராக (ரூ. 85 லட்சம்) உயர்த்தும் அமெ ரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் முடிவு, இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு எதிரான வெளிப்படையான தாக்குதல் ஆகும். இந்தியர்க ளில் 60 சதவீதம் பேர் இந்த புதிய கட்டணத்தை விட குறைவான சம்பளம் பெறுகின்றனர் என்பது தான் பெரும் அதிர்ச்சி.
2024இல் இந்திய எச்-1பி பணியாளர்களின் சராசரி ஆண்டுச் சம்பளம் 95,500 டாலராக (ரூ. 81 லட்சம்) இருந்தது, பாகிஸ்தான் மற்றும் நேபாள தொழிலாளர்களை விட இது குறைவு. இந்த புள்ளிவிபரங்கள் அமெரிக்க நிறுவனங்கள் இந்திய தொழிலாளர்களை எவ்வாறு சுரண்டு கின்றன என்பதை தெளிவாக காட்டுகின்றன. 75,000 டாலருக்கும் (ரூ. 64 லட்சம்) குறைவாக 12 சதவீதம் இந்தியர்கள் பணிபுரிகின்றனர், அதே சமயம் இந்தியர் அல்லாத தொழிலாளர்களில் இது வெறும் 9 சதவீதம் மட்டுமே.
இந்த கட்டண உயர்வு இந்திய தொழிலா ளர்களின் மீது 125 சதவீத சுமையை ஏற்படுத்தும். ஏற்கனவே குறைந்த சம்பளம் பெறும் பெரும் பான்மை இந்தியர்களுக்கு இது தங்கள் ஆண்டு சம்பளத்தையே விழுங்கிவிடும். 80,000 டாலர் (ரூ. 68 லட்சம்) சம்பளம் பெறும் ஒரு வருக்கு இந்த கட்டணம் அவரின் முழு ஆண்டு வருமானத்திற்கு சமமாகும்.
அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்திய ஊழியர்களின் பங்களிப்பு அளப்பரியது. கூகிள், மைக்ரோசாப்ட், அடோபி போன்ற நிறுவனங்களின் தலைமையகங்களை இந்தி யர்கள் நடத்துகின்றனர். இந்திய கணினிப் பொறி யாளர்கள் அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு, மென்பொருள் துறைகளின் முது கெலும்பாக விளங்குகின்றனர். இவர்களின் புது மைத்திறன் மற்றும் கடின உழைப்பே அமெ ரிக்காவை உலக தொழில்நுட்ப வல்லரசாக வைத்திருக்கிறது.
ஆனால் டிரம்ப் நிர்வாகம் இதை மறந்து, வெறும் நிறவெறி மற்றும் பொருளாதார பாது காப்புவாதத்தின் அடிப்படையில் கொள்கைக ளை உருவாக்குகிறது. இந்த முடிவு வெள்ளை யின மேலாதிக்கவாதத்தின் வெளிப்பாடாகும். அமெரிக்க நிறுவனங்கள் இந்திய தொழிலா ளர்களுக்கு குறைந்த சம்பளம் தருவதை மூடிமறைக்கவே இந்த நடவடிக்கை என்பது தெளிவாகிறது.
இந்த கொள்கை 2023-24ல் எச்-1பி விசா பெற்ற வர்களில் 71 சதவீதம் இந்தியர்களை நேரடியாக பாதிக்கும். கடைசியாக 2,000 முதல் 5,000 டாலர் (ரூ. 1.7 முதல் 4.3 லட்சம்) வரை இருந்த கட்டணம், இப்போது 20 மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது. முக்கியமாக, மூன்று ஆண்டு விசா காலத்திற்கு 3 லட்சம் டாலர் (ரூ. 2.55 கோடி) செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இந்த அதிகப் படியான கட்டணம் நடுத்தர வர்க்க இந்தி யர்களின் அமெரிக்க கனவை நசுக்கும் கொடிய தாக்குதல் ஆகும்.