தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (23-09-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.70 உயர்ந்து ரூ.10,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.49,600-க்கும், கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.8,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.149-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,49,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.