headlines

img

இறையாண்மையின் அடித்தளம்

மோடி அரசு உலகளவில் தனது நிதி இறை யாண்மையை நிலைநாட்டும் பொருட்டு ‘செல்வ இறையாண்மை நிதியத்தை’ உருவாக்க முடிவு செய்துள்ளது. அதற்காக நாட்டின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையும், சொத்துக்களையும் விற்று நிதி திரட்டுவது என்ற மிக ஆபத்தான பாதையை தேர்வு செய்துள் ளது. கண்ணை விற்று சித்திரம் வாங்குவது என்ப தற்கு மிகச் சிறந்த உதாரணம் இது. 

உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி எவ்வி தத் தீர்வும் இல்லாமல் நாடுகளை அதிதீவிர நெருக்கடிகளின் பிடியில் சிக்கச் செய்கிறது. இந்தப் பின்னணியில் பல நாடுகள் தங்களது நிதி இறையாண்மையை உறுதி செய்வதற்காக - அதாவது, எந்தச் சூழலிலும் திவால் ஆகிவிடா மல் நிதி ரீதியாக வலுவாக நிலைநாட்டிக் கொள்வ தற்காக - வலுவான செல்வ ஆதாரங்கள் கொண்ட  நிதியத்தை உருவாக்கி பேணி வருகின்றன. குறிப்பாக சீனா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீ ரகம் உள்பட 40 நாடுகள் இத்தகைய நிதியத்தை சமீப காலத்தில் உருவாக்கி வலுப்படுத்திக் கொண்டுள்ளன. இந்தியாவில் இதுவரை அப்படி ஒரு நிதியம் இல்லை. உலகளாவிய பல்வேறு வகையான நெருக்கடிகள் முற்றி வரும் நிலை யில், இத்தகைய ஒரு நிதியத்தை உருவாக்கிக் கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் இதில் அதிர்ச்சிகரமான அம்சம் என்னவெனில், ஒன்றிய அரசுக்கு சொந்தமான 48 பொதுத்துறை நிறுவனங்களில், அரசுக்கு சொந்த மான பங்குகளை கணிசமாக விற்று அதன்மூலம் 50 லட்சம்கோடி ரூபாயை திரட்டுவது என மோடி அரசு திட்டமிட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல்தான். 

இப்படி திரட்டப்படும் நிதியைக் கொண்டு இந்திய இறையாண்மை நிதியத்தை உருவாக்கி, அதை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முத லீடு செய்து பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொள்ளலாம் என ஒன்றிய அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. 

உலகப் பெரும் முதலாளிகளின் லாபவேட்கை க்கு சேவை செய்யும் விதத்தில் நவீன தாராளமயக் கொள்கைகளை உச்சக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ள மோடி அரசு தனது ஆட்சிக் காலம் முழுவதிலும் பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்துவது, தனியார்மயமாக்குவது, எஞ்சியுள்ள பங்குகளையும் விற்றுத் தீர்ப்பது, அவற்றின் சொத்துக்களை எல்லாம் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மடை மாற்றுவது என முற்றிலும் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த தொழிற் சங்கங்களும், தொழிலாளர் வர்க்கமும் வலுவான போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளன. ஆனால் எதற்கும் செவி சாய்க்காத மோடி அரசு, தற்போது ஒட்டுமொத்த பொதுத்துறை நிறுவனங்க ளின் பங்குகளை தனியாருக்கு வாரி வழங்குவது என ஆலோசித்திருப்பது மிக  மிக ஆபத்தானது. இந்த பொதுத்துறை நிறுவனங்கள் தான் இந்திய நிதி இறையாண்மையின் அடித்தளங்கள் என் பதை மறந்து அவற்றை தகர்க்கப் பார்க்கிறது மோடி அரசு.