headlines

img

ஆளுநர்களின் அடாவடிக்கு இன்னுமொரு கடிவாளம்

ஆளுநர்களின் அடாவடிக்கு இன்னுமொரு கடிவாளம் 

ஏபிஜே அப்துல்கலாம் தொழில்நுட்ப பல் கலைக்கழகத்திற்கு தற்காலிக துணைவேந்தராக கேரள ஆளுநர் நியமித்தது செல்லாது என்று கேரள உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்நியமனத்தில் சட்டப்பூர்வ நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் மசோ தாக்களை கால வரையறையின்றி ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்திருப்பது சட்ட விரோ தம் என்று உச்சநீதிமன்றம் ஓங்கி குட்டியதோடு தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டிருந்த பத்து மசோ தாக்களுக்கு அனுமதி அளித்தது. அதுமட்டு மின்றி மசோதா குறித்து குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநருக்கு மட்டு மின்றி குடியரசு தலைவருக்கும் உச்சநீதிமன்றம் கெடு விதித்தது.

இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றம் வழங்கி யுள்ள தீர்ப்பு கூட்டாட்சி கோட்பாட்டை வலுப் படுத்துவதாகவும், ஆளுநர்களின் அராஜகம், அடாவடிக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது

துணை வேந்தர்கள் நியமனத்தின் போது மாநில அரசு பரிந்துரைத்த பட்டியலிலிருந்தே ஒரு வரை ஆளுநர் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் கேரள ஆளுநர் மாநில அரசு பரிந்துரைக்காத கே. சிவபிரசாத்தை தற்காலிக துணை வேந்தராக நியமித்தார். இதை எதிர்த்து கேரள இடது ஜனநா யக முன்னணி அரசு உயர்நீதிமன்றத்தை நாடியது. பல்கலைக்கழக சட்டப் பிரிவு 13(7)ன்கீழ் மாநில அரசு பரிந்துரை செய்யாமல் ஆளுநர் யாரையும்  துணைவேந்தராக நியமிக்கக் கூடாது என்று கேரள  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில அரசுக்கு போட்டியாக துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்டுகிறார். குடியரசுத் துணை தலை வர் ஜெகதீப் தன்கர் அந்த மாநாட்டில் பங்கேற்கி றார். அதுமட்டுமின்றி, ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையை பல்கலைக்கழகங்கள் செயல்படுத்த வேண்டும் என்று ஆளுநர் ஆர். என்.ரவி நிர்பந்தப்படுத்துகிறார். மேலும் மும்மொ ழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வம்படியாகப் பேசி வருகிறார்.

கவுரவப் பதவியான பல்கலைக்கழக வேந்தர் என்பதிலிருந்து ஆளுநரை நீக்க வேண்டும்; மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் தலைவரான முதல்வரே பல்கலைக்கழ கங்களின் வேந்தராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு வேந்தர் பொறுப்பிலி ருந்து தமிழ்நாடு ஆளுநரை விடுவித்து, மாநில முதல்வரை நியமிப்பதற்கு அங்கீகாரம் அளித் துள்ளது. இது அனைத்து மாநிலங்களிலும் நடை முறைக்கு வரவேண்டியது அவசியமாகிறது.

ஆளுநர்கள் அரசியல் சட்ட காப்பாளர்க ளாக இருக்க வேண்டுமேயன்றி, அதை சீர்குலைப் பதை அனுமதிக்க முடியாது என்பதை கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓங்கி உரைத்துள்ளது.