பெஞ்சால் புயல் மழை காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்க ளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 12 உயிர்கள் பலியாகியுள்ளன. இதர உயிர்ச்சேதம், பயிர்ச் சேதம் கணக்கெடுப்பின் முதல் கட்ட தகவல்கள் அடிப்படையில் தமிழக முதல்வர், உடனடி நிவார ணப் பணிகளுக்காக ரூ.2 ஆயிரம் கோடி கேட்டு ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்தியக் குழுவையும் உடனடியாக அனுப்பி சேத மதிப்பி டலை கணக்கிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடி முதல்வரிடம் பேசி, உதவுவதாக கூறியிருக்கிறார் என்ற தகவலும் கிட்டியுள்ளது.
இதற்கிடையில் உயிரிழப்புக்கு ரூ.5 லட்சமும், குடிசை இழப்புக்கு ரூ.10 ஆயிரமும் இறவை பாச னப் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரமும் மானாவாரிக்கு ரூ.8.5 ஆயிரமும் கால்நடைகளு க்கு ரூ.37.5 ஆயிரமும் ஆட்டுக்கு ரூ.4 ஆயிர மும் கோழிக்கு ரூ.100- ம் இழப்பீடு வழங்கவுள்ள தாக முதல்வர் தலைமையில் நடந்த ஆலோச னைக் கூட்டத்தில் செவ்வாயன்று முடிவு செய்யப் பட்டுள்ளது.
ஆயினும் இந்த இழப்பீடு போதாது என்பது ஒரு புறமிருக்க, இவற்றை வழங்குவதற்கு ஒன்றிய அரசின் பேரிடர் நிதியிலிருந்து உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடியை வழங்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு விரைவான நடவடிக்கை வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆயினும் கடந்த ஆண்டு தென் மாவட்டங்க ளிலும் சென்னையிலும் ஏற்பட்ட புயல் பாதிப்புக்கு ஒன்றிய அரசு கிள்ளிக் கொடுத்து தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது.
பொதுவாகவே எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநி லங்களில் ஏற்படும் பேரிடர்களுக்கு உதவுகிற எண்ணமே ஒன்றிய அரசுக்கு வருவதில்லை. பேரிடர் என்று அறிவிப்பதற்குக் கூட அதற்கு மனமில்லை. மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே நடக்கிறது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்கள் என்றால் அள்ளிக் கொடுக்கிறது. ஆபத்துக்கு உதவாத, கடும் பாதிப்புக்கு உதவாத பாஜகவின் ஒன்றிய அரசு அண்மையில் கேரளத்தின் வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்குக் கூட எந்த உதவியும் செய்யாத நிலையே தொடர்ந்தது. என்றாலும் இந்த முறையாவது தமிழகத்தின் வட மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கும் நிலையில் நெஞ்சில் கொஞ்சம் ஈரத்துடன் நடந்து தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடி நிவாரணத்துக்காக தமிழக அரசு கேட்டுள்ள தொகையை வழங்கினால் உதவிகரமாக இருக்கும்.
ஒன்றிய அரசு மத்தியக் குழுவை அனுப்புவ தும் மாநில அரசு கேட்ட நிதியை உடனடியாக வழங்குவதுமே காலத்தே செய்யும் உதவியாகும். அல்லல்படும் மக்களின் கண்ணீரைத் துடைப் பதே ஆட்சியாளர்க்கு அழகு. ஈரநெஞ்சத்துடன் செயல்பட வேண்டும் என்பதே ஒன்றிய அரசி டம் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. அதை நிறை வேற்றுவது அதன் கடமை.