அதிமுகவின் அழிவுப்பாதை
அதிமுக, தமிழகத்தின் வரலாற்றில் முக்கிய மான கட்சி. ஆனால் இன்று அக்கட்சி மிகப்பெரிய அழிவுப் பாதையில் பயணிக்கிறது. 47 ஆண்டு களில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி, இன்று ஏழு தொகுதிகளில் வைப்புத்தொகையே இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிமுக தலைமையின் தற்போதைய செயல் பாடுகள் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. பாஜகவு டன் கூட்டணி வைத்து தோற்ற பின்னும், மீண்டும் அதே கூட்டணியை நோக்கி நகர்வது வியப்பளிக் கிறது. எடப்பாடி பழனிசாமி அவர்கள் மறுத்தா லும், அமித் ஷாவுடன் நடந்த சந்திப்பு நிச்சய மாக அரசியல் கூட்டணி குறித்ததே
தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், வெறும் அதிகார ஆசையில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க தயாராக இருப்பது மக்களுக்கு எதிரான செயல். இதனால்தான் அதிமுக 39 தொகுதிகளிலும் தோற்றது. திமுக தலைமையிலான கூட்டணி அனைத்து இடங்க ளையும் கைப்பற்றியது.
அதிமுக இன்று அடிப்படை ஆதரவாளர்க ளையும் இழந்து வருகிறது. விஜய் மற்றும் சீமான் போன்ற புதிய கட்சிகள் கூட அதிமுகவுடன் இணைய விரும்பவில்லை. இது அக்கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளதை காட்டுகிறது
மக்கள் நலனை கவனிக்காமல், வெறும் அதிகாரத்திற்காக கூட்டணி வைப்பது எந்த மக்க ளுக்கும் நன்மை தராது. அதிமுகவும் பாஜகவும் மக்கள் நலனுக்காக என்ன செய்யப்போகிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
அதிமுகவின் தற்போதைய நிலைக்கு அக்கட்சியின் தலைமையின் குழப்பமும் ஒரு முக்கிய காரணம். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையேயான உட்கட்சி மோதலால் தொண்டர்கள் குழப்பமடைந்தனர். கட்சி இரண்டாக உடைந்தபோது, அதன் வலிமை யும் குறைந்தது. பாஜகவுடன் ‘உள்ளே வெளியே’ விளையாடி, மீண்டும் உள்ளே சென்று ஆட எத்தனிக்கிறது. ஆனால், ‘திருதராஷ்டிர ஆலிங் கனம்’ போல் நிலைமை ஆகிவிடும் ஆபத்து அக்கட்சிக்கு உள்ளது.
அதிமுக-பாஜக கூட்டணி என்பது தமிழக மக்களுக்கு எதிரான ஒரு கூட்டணி. தமிழக விவ சாயிகளின் நலனுக்கு எதிராக செயல்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது பாஜக அரசு. அதனை எதிர்த்த விவசாயிகள் ஓராண்டு காலம் போராடினர். ஆனால் அதிமுக அது குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. தமிழகத்தின் நீர் உரிமைகள், மொழி உரிமைகள், நீட் தேர்வு, மருத் துவ படிப்புகளில் ஒதுக்கீடு என அனைத்திலும் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டி ருந்தது பாஜக. அத்தகைய கட்சியுடன் கூட்டணி தொடர்ந்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் வீழ்ச்சி காத்திருக்கிறது. மாநிலத்தின் தனித்துவத்தை புரிந்து கொள்ளாத, தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம், மொழி ஆகியவற்றை மதிக்காத எந்த கட்சியும் தமிழ கத்தில் வெற்றி பெற முடியாது. இதை அதிமுக தலைமை புரிந்து கொள்ள தவறினால், அக்கட்சி தமிழக அரசியலில் இருந்து முற்றிலுமாக ஒதுக் கப்படும் நிலை ஏற்படும்.