17வது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி,மதச்சார்பின்மை, கருத்துச் சுதந்திரம், நாட்டின்பாதுகாப்பு உள்ளிட்டவை பெரும் விவாதமாகமாறியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜக வளர்ச்சியை பற்றி அதிகமாக பேசியது. ‘‘அரை நூற்றாண்டுகளாக நாட்டைஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால் வறுமையைவிரட்ட முடியவில்லை. வேலைவாய்ப்பைஏற்படுத்த முடியவில்லை, அனைத்து துறைகளிலும் நாடு பின்தங்கிவிட்டது’’ என்று பேசிஆட்சிக்கு வந்தவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில்பேசிக்கொண்டே இருந்தார்களே தவிர உருப்படியாக எதையும் செய்யவில்லை.ஆண்டுக்கு இரண்டு கோடிப்பேருக்கு வேலைஇதரப்படும் என்ற வாக்குறுதி குறித்து தற்போது பிரதமர் பேச மறுக்கிறார். வளர்ச்சிபற்றியும் பேசுவதில்லை. உண்மை நிலை என்னவென்றால் அரசின் மோசமான பொருளாதாரகொள்கையால் கடந்தாண்டு மட்டும் சுமார் ஒருகோடி பேர் வேலையிழந்துள்ளனர். இந்த கணக்கை எதிர்க்கட்சிகள் சொல்லவில்லை. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான சிஎம்ஐஇ தெரிவித்துள்ளது.இப்படி திடீரெனவேலையின்மை அதிகரிக்க பணமதிப்பிழப்பும் ஜிஎஸ்டியும் தான் காரணம் என தெரியவந்துள்ளது. முதலாளிகளும் தொழிலாளர்களாக வேலையில் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது. படிக்காதவர்களை விட பட்டதாரிகளிடம் தான் அதிக வேலைஇழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதுகூறியுள்ளது.
அண்மையில் ரயில்வே கடைநிலை வேலைக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் கணக்கைப்பார்த்தால் வேலையின்மையின் கொடுமை புரியும். 62 ஆயிரத்து 907 கடைநிலை ஊழியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்புதான் குறைந்தபட்ச கல்வித்தகுதி. மொத்தம் 1.89 கோடிபேர் இதற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் பட்டதாரிகளும் பட்டமேற்படிப்பு படித்தவர்களும் மட்டும் 89 லட்சம்பேர். இவர்களில் 4,19,137 பேர் பி.டெக் படித்தவர்கள் 40,751 பேர் எம்.டெக் படித்தவர்கள். தகுதிகுறைவான வேலையை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு பல இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள் உபேர் கால் டாக்சி ஓட்டவேண்டியுள்ளது. இதுஒரு புறம் தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள சுமார் 2லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப அதிமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் தொகுப்பூதியம், மதிப்பூதியம் அல்லது அவுட்சோர்ஸ் அடிப்படையில் பணிகளை ஒப்படைத்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் வயிற்றில் அடிக்கிறது. இதைப்பற்றி எல்லாம் கேள்வி கேட்டால் மத்திய ஆட்சியாளர்கள் பாலகோட் மீது இந்தியா தாக்குதல் நடத்தி விட்டது, எதிரி நாட்டு செயற்கைக்கோளை சுட்டுவீழ்த்தும் திறனைஇந்தியா பெற்று விட்டது என்று கூறி பிரச்சனையை திசைதிருப்புகிறார்கள். மக்களை தொடர்ந்து முட்டாளாக்கும் மத்திய மாநில ஆட்சியாளர்களுக்கு வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் மூலமாக நாட்டு மக்கள் சரியான தீர்ப்பை வழங்கவேண்டும்.