சென்னை, மே 17 தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் செவ்வாயன்று (மே 17)செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் சாய் பல்கலைக் கழகக் கட்டடத்தை திறந்து வைத்து, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில், உயர் கல்வித்துறையின் கட்டுப் பாட்டில் இப்போது 13 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இப்போது தனியார் பல்கலைக் கழகமான சாய் பல்கலைக்கழகத்தின் கல்வி கட்டடங்களைத் துவக்கி வைத்து, மாணவர்க ளுக்கான உயர்கல்விக்கு இன்னொரு அடிக்கல்லை நாட்டியிருக்கிறேன் தமிழக அரசு உயர்கல்வியில் தீவிரமாக கவனம் செலுத்திக் வரு கிறது. நுழைவுத் தேர்வை கலைஞர் ரத்து செய்ததால் மாநிலத்தில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது. ஆனால் இது தேசிய அளவில் 27.1 விழுக்காடுதான். உயர்கல்வியில் அகில இந்திய மாணவர் சேர்க்கை விகிதத்தைத் தாண்டி தமிழகம் முன்னணியில் நிற்பதற்கு பல காரணிகள் உண்டு. உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழ்நாட்டில் இருந்துதான் கிடைக்கிறார்கள். இந்த நிலையை மேலும் மேம்படுத்த “நான் முதல்வன்” என்கிற திட்டத்தை தொடங்கி யுள்ளோம். தமிழக மாணவர்களின் திறமை களை அதிகரித்து அவர்கள் சாதனைகளை நிகழ்த்தக்கூடியவர்களாக மாற்ற வேண்டும் என்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம். அதற்கு சாய் பல்கலைக்கழகமும், அத னுடைய நிர்வாகமும், விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் துணைநிற்க வேண்டும். நம் மாணவர்களை உயர்கல்வியில் சிறந்த மாணவர்களாக ஆக்கு வோம். உயர்கல்விக்குப் பொற்காலத்தை உருவாக்கு வோம் என்றார் முதல்வர். இந்த விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத், சாய் பல்கலைக் கழகத்தின் நிறு வனர் மற்றும் வேந்தர் கே.வி.ரமணி, துணை வேந்தர் பேராசிரியர் ஜம்ஷெட் பருச்சா, நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் முகமது ரேலா, பதிவாளர் பிலிப்ஸ் ஸ்டேன்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.