headlines

img

போட்டா போட்டியால் யாருக்கு லாபம்?

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் ஏற்பட இருக்கும் ஆபத்துக்க ளைப் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும், வணிகர் சங்கங்களும் எச்சரித்தன. இதனால் உள்நாட்டு சில்லரை வர்த்தகம் கடும் பாதிப்பை சந்திப்ப தோடு பன்னாட்டு நிறுவனங்கள் வியாபார அறமற்ற கழுத்தறுப்பு போட்டியில் ஈடுபடும் என்று எச்சரிக்கப்பட்டது. ஆனால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தாங்கள் செய்திருப்ப தாகக் கூறி மோடி அரசு சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அந்நிய முத லீட்டை தங்கு தடையின்றி அனுமதித்தது.  ஆனால் தற்போது பிளிப் கார்டு, அமேசான் போன்ற நிறுவனங்களிடமிருந்து விபரங்களை மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. அமேசான், பிளிப்கார்டு போன்ற அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுக் கொண்டு ஆன் லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. 

தீபாவளி பண்டிகையையொட்டி பிளிப் கார்டும், அமேசானும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவிக்கின்றன. பிற நிறுவனங்க ளை சந்தையிலிருந்து ஒழிக்கும் நோக்கத்துடன் பல்வேறு சலுகைகளை இந்நிறுவனங்கள் அறி வித்து வருகின்றன. இதன்மூலம் ஓராண்டில் நடை பெறும் விற்பனையில் பாதியை அந்நிறுவனங்கள் எட்டிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் பிற நிறுவனங்களே இந்த கழுத்தறுப்பு போட்டியை சமாளிக்க முடியவில்லை என்றால் நாடு முழு வதும் உள்ள லட்சக்கணக்கான சிறு மற்றும் குறு வர்த்தகர்களின் நிலை என்ன என்பதை சொல்லத் தேவையில்லை.

இந்திய மக்களுக்கு சலுகை விலையில் பொருட்களை தருவதல்ல, அமேசான், பிளிப் கார்டு போன்ற நிறுவனங்களின் நோக்கம். மாறாக சக போட்டியாளர்களை சந்தையிலிருந்து அப்புறப்படுத்துவதோடு சில்லரை வர்த்தகத்தை தங்களது ஒட்டுமொத்த கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுதான் இவர்களது நோக்கம். மோடி அரசும் இதற்கு முற்றாக துணை செல்கிறது.

அமேசான், பிளிப் கார்டு போன்ற நிறுவ னங்கள் போட்டி போட்டுக் கொண்டு சலுகை களை அறிவிப்பதால் தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்குமாறு நுகர்வோர் தூண்டப்படு வதாகவும், உண்மையிலேயே தள்ளுபடி தரப்படு கிறதா என்று கண்டறிவது கடினம்தான் என்றும் பரபரப்பு விற்பனை மூலம் நுகர்வோரை ஏமாற்றும் லாட்டரிச் சீட்டு வியாபாரம் போலத்தான் இதுவும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் விபரீதமாக மாறியிருக்கிற இந்தப் போட்டி அடுத்தடுத்து புதிய அபாயக் கட்டத்தை எட்டும் நிலை உள்ளது. சில்லரை வர்த்தகத்திலிருந்து பன்னாட்டு நிறுவ னங்களை முற்றாக அகற்றுவதன் மூலமே இந்தியச் சந்தையை மட்டுமல்ல நுகர்வோர்க ளையும் பாதுகாக்க முடியும்.