கொரோனா தொற்றை தொடர்ந்து அறிவிக் பப்பட்ட மூன்றாவது கட்ட ஊரடங்கு மே 17ஆம் தேதியுடன் முடியவடைய இருக்கிறது. இதற்குப் பிறகு மத்திய அரசும், மாநில அரசுகளும் எத்த கைய நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கி றது. பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் உரை யாடியுள்ளார்.
கடந்த முறை மாநிலங்களுடன் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உரையாடிய பொழுது, மாநிலங்களின் கருத்துக்கள் மற்றும் நிதித் தேவையை கருத்தில்கொண்டு மத்திய அரசு உரிய நடவடிக்கை எதையும் எடுத்ததாகத் தெரிய வில்லை. இந்த உரையாடலின் பயனாக நோய்த் தொற்றை தடுக்கவும், முற்றிலும் நிலை குலைந்துள்ள இந்திய மக்களின் வாழ்வாதா ரத்தை மீட்கவும் உரிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதனிடையே ஜூலை மாதத்தில் இந்தியா வில் கொரோனா உச்சத்தை எட்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட ஊரடங்கு போன்ற நடவடிக்கை களால் தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது என்பது உண்மை.
தற்போது கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்ச மாக விலக்கிக் கொள்ளப்படுகின்றன. பல்வேறு கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளுடன் தொழிற்சாலைகள் இயங்க வும் வழி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதும் அவசிய மானதே.
நோய்த்தொற்றை தடுக்க ஊரடங்கு ஒன்றே வழி என்று மத்திய-மாநில ஆட்சியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தநிலையில், தற்போது கொரோனாவுடன் சேர்ந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர்களும், அதி காரிகளும் பேசத்துவங்கியுள்ளனர்.
தனிமனித இடைவெளி மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடருமா என்கிற கேள்விக்குறியையே இது எழுப்புகிறது. நோய்த்தொற்று தீவிரமாகுமானால் அதனால் பாதிக்கப்படப்போவது ஏழை-எளிய விளிம்பு நிலை மக்களேயாவர். அவர்களது வாழ்வாதாரம் முடங்கியுள்ளநிலையில் மத்திய-மாநில அரசு கள் தேவையான நிவாரண உதவிகளை வழங்க வில்லை. புலம்பெயர் தொழிலாளர்களை மத்திய அரசு நடத்தியவிதம் உலகத்தையே அதிர்ச்சிய டையச் செய்துள்ளது.
தளர்வுகள் நீக்கம் என்பதோடு தன்னுடைய கடமை முடிந்துவிட்டதாக மத்திய அரசு கரு தக்கூடாது. சிறு-குறு தொழில்களுக்கு தேவை யான உதவி, பெரும்பகுதி மக்களுக்கு நிவார ணம், விவசாயம், நெசவு உள்ளிட்ட துறைகள் மீட்சியடைய போதுமான நிதிஉதவி, கடனுதவி போன்றவற்றை மத்திய அரசும், மாநில அரசு களும் அறிவிக்க வேண்டும். மாறாக இந்த நெருக் கடியைப் பயன்படுத்திக் கொண்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்ய மத்திய அரசு திட்டமிடுமானால் மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்படுவதை தடுக்க முடியாது.