headlines

img

எங்கே போவது?

போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தாலோ அல்லது பொதுச் சொத்துக்கு சேதாரம் விளைவிக்கப்பட்டாலோ நாங்கள் இந்த வழக்கை விசாரிக்கப் போவதில்லை என்று திங்க ளன்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிக்கப்படு பவர்கள் தனி ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் என்றில்லாமல் பல்வேறு தரப்பினரும் பல்வேறு மொழி பேசும் மாநில மக்களும் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அமைதியாக நடக்கும் மாணவர் போராட்டத்தில் காவல்துறையினரே தீ வைத்து கொளுத்துவது, தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை வெளிப் படுத்தும் பல்வேறு காணொளிகள் உலா வரு கின்றன.  இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெயசிங் நாடு முழுவதும் மாணவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப் பட்டுள்ள வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரிக்க வேண்டுமென கோரிக்கை எழுப்பிய போதே தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு வன்முறை தொடர்ந்தால் விசாரிக்கப் போவதில்லை என்று கூறி டிசம்பர் 18-க்கு விசாரணையை தள்ளி வைத்தது. 

குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் பல நூற்றாண்டு கலாச்சாரமான அனைவரையும் ஏற்றுக் கொள்ளுதல், நல்லிணக்கம், சக உயிர்க ளிடம் அன்பு செலுத்துதல் ஆகியவற்றை வெளிக் காட்டும் வகையில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். ஆனால் பாகிஸ்தான், ஆப்கா னிஸ்தான், வங்கதேசம் ஆகியவற்றிலிருந்து வரும் இந்துக்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்குவதற்கே இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. ஆனால் இலங்கையிலிருந்து வந்த தமிழர்க ளான இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவது பற்றி ஏன் சேர்க்கப்படவில்லை? மதரீதியிலான பாதிப்பு அடைந்தவர்களை அரவணைக்கும் சட்டம் என்றால் மியான்மரின் ரோகிங்யா அகதி கள் உள்ளிட்டவர்கள் சேர்க்கப்படாதது முஸ்லிம் கள் என்பதனால்தானே!

ஆட்சியாளர்களால் பாதிக்கப்படும் பொழுது நீதி தேடி மக்கள் நீதிமன்றங்களை நாடி வருகி றார்கள். ஆனால் நீதிமன்றங்கள் மேற்கண்டவாறு நிபந்தனை விதித்தால் அவர்கள் எங்கே செல் வார்கள்? 

ஜெர்மனியில் ஹிட்லர் காலத்தில் நாடாளு மன்ற கட்டிடத்திற்கு தீ வைத்துவிட்டு கம்யூ னிஸ்ட்டுகள் மீது பழிபோட்டது போல காவல் துறையினரும் மற்றவர்களும் வன்முறையில் ஈடு பட்டு மாணவர்கள் மீது பழி போடுவதை பிரித்த றிய வேண்டாமா? போராட்டக்காரர்களின் நியா யத்தை உணராமல் நீதிமன்றம் இருக்கலாமா? 

நாம் இருக்கும் நாடு நமது என்று அறிந்தோம் என்றார் பாரதி. ஆனால் இலங்கையிலிருந்து வந்த பெற்றோருக்கு இந்தியாவிலேயே பிறந்த 28 வயது இளைஞர் ஒருவர் எங்களுக்கு குடி யுரிமை வழங்கவில்லையென்றால் கருணை கொலை செய்துவிடுங்கள் என்று சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தி ருப்பதற்கு என்ன பதில்?