நாடு முழுவதும் பெரும்பாலான அரசுப்பள்ளி களில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்து வந்துள்ள வருடாந்திர கல்வி அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. முதல் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 41.1 விழுக்காட்டினர் மட்டுமே 2 இலக்க எண்களை அடையாளம் காண்பவர் களாக உள்ளனர்.
24 மாநிலங்களில் 26 மாவட்டங்களில் நடத்தப் பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,514 கிராமங்கள், 30,425 வீடுகள், 4முதல் 8 வயதுக்கு உட்பட்ட 36,930 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2009ல் குழந்தைகள் 6 வயதில் 1 ஆம் வகுப்பில் நுழைய வேண்டும் என்று கூறப்பட்டுள் ளது. இருப்பினும், 1 ஆம் வகுப்பில் உள்ள ஒவ் வொரு 10 குழந்தைகளில் 4 பேர் 5 வயதுக்கு குறை வானவர்கள் அல்லது 6 வயதுக்கு மேற்பட்ட வர்களாக உள்ளனர்.பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும்போது இந்த சட்டம் மீறப்படுகிறது. இது குழந்தையின் அறிவாற்றல், ஆரம்ப மொழி, ஆரம்ப எண் மற்றும் கற்றல் திறனை பாதிக்கிறது. எடுத்துக்காட்டாக, முதல் வகுப்புக் கான பாடத்தை 4 மற்றும் 5 வயதுடைய எந்த குழந்தைகளும் படிக்கமுடியாது என்று அறிக்கை கூறுகிறது. மொத்த குழந்தைகளில் 52விழுக் காட்டினரே வார்த்தைகளை படிக்கமுடிகிறது. 63விழுக்காட்டினர் மட்டுமே கணக்குகளுக்கு தீர்வு காணும் திறனை பெற்றுள்ளனர்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை நிர்பந்தப் படுத்தி படிக்கவைப்பதன் வாயிலாக அவர் களை அரசுப்பள்ளிகள் கற்றல் குறைபாட்டிற் குள் தள்ளுகின்றன என்கிறது இந்த அறிக்கை. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) குழந்தைகள் முதல் வகுப்பிலேயே 99 விழுக்காடு வரையிலான எண் களை அடையாளம் காண முடியும் என்று கூறு கிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக இருக்கிறது இந்த அறிக்கை. பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் போது அதில் பாலின பாகுபாடு காட்டப் படுவதும் அம்பலமாகியுள்ளது. ஆண் குழந்தை களை தனியார் பள்ளியிலும் பெண் குழந்தை களை அதிகமாக அரசுப் பள்ளியிலும் சேர்க்கின்றனர்.
ஆரம்பக் கல்வியில் பாடத்தை கற்பிப்பதை காட்டிலும் அறிவாற்றலை வளர்க்க உதவும் திறன்களை குழந்தைகளிடம் ஏற்படுத்துவதன் வாயிலாக அவர்களை கல்வியிலும் அறி வாற்றல் நிறைந்தவர்களாக உருவாக்கமுடியும். படங்களை காட்டி அது என்ன என்று கேட்கும் போது அரசுப்பள்ளிகளில் படிக்கும் குழந்தை களில் 63.7விழுக்காட்டினர் சரியான விளக்கத்தை அளித்துள்ளனர். எனவே செயல் வழிக் கற்றல் முறையை மேம்படுத்திட கட்டமைப்பு வசதி களை மேலும் விரிவுபடுத்தவேண்டும். உலகள வில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி 5வயதின்போது தான் குழந்தைகளின் மூளை வளர்ச்சி யடையத் தொடங்குகிறது. இதில் ஏற்படும் மாற்றம்தான் பிற்காலத்தில் அக்குழந்தைகளின் பள்ளிக் கல்வியில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்து கிறது. எனவே தாய்மொழியில், அனைவருக் கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.