headlines

img

வீழ்ச்சியே சாட்சி!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.7 ஆக வரலாறு காணாத வகை யில் வீழ்ச்சியடைந்திருக்கிறது. இது மோடி ஆட்சி யில் இந்தியப் பொருளாதாரம்  எந்த திசையை நோக்கிச் செல்கிறது என்பதற்கான சாட்சியா கவும் இருக்கிறது.

2024- 2025 நடப்பு நிதியாண்டில்  இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7 சதவிகிதமாக இருக்கி றது, இது விரைவில் 8 சதவிகிதத்தைத் தொடும் என இந்திய ரிசர்வ் வங்கி கூறுகிறது. இது உண்மை யெனில் ஏன்  டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து அதலபாதாளத்திற்கு செல்கி றது? இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின்  உண்மை யான பொருளாதார தரவுகளின் அடிப்படையில் கணக்கிடுகிறதா; அல்லது “மோடினாமிக்ஸ்”  புனைவுகளை புள்ளிவிவரங்களாக மாற்றுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையும் போது அது பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் எதார்த்தம். குறிப்பாக மருந்துகள், தங்கம், பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயனங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவை  ரூபாய் மதிப்புடன் நேரடித் தொடர்புடையவை. எவ்வ ளவிற்கு எவ்வளவு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிய டைகிறதோ, அதே வேகத்தில் பொருட்களின் விலையும் பன்மடங்கு உயரும். 

காரணம், இந்தியாவில் ஏற்றுமதி செய்வதை விட இறக்குமதியின் அளவு அதிகமாக இருக்கி றது.  அதாவது வர்த்தகப்பற்றாக்குறை ரூ.1 லட்சத்து  76 ஆயிரம் கோடியாக (20.78 பில்லியன் டாலர்) இருக்கிறது. மறுபுறம் வழக்கத்திற்கு மாறாக  இந்த மாதத்தில் மட்டும் 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகள் இந்தியச் சந்தையிலிருந்து வெளியேறியிருக்கிறது. அதாவது வழக்கமாக அக்டோபர் மாதம் பண்டிகை காலம் என்பதால் வர்த்தகம் அதிகரிக்கும். முதலீடுகளும் அதி கரிக்கும். ஆனால் தற்போது, இருக்கும் முதலீ டும் வெளியேறியிருக்கிறது. 

இந்த லட்சணத்தில் எப்படி ஜிடிபி வளர்ச்சி 8 சதவிகிதத்தை எட்ட முடியும் ? பொதுவாக சர்வ தேச அளவில் போர் அல்லது மிகப்பெரிய இடர் பாடு ஏற்பட்டால் கச்சா எண்ணெய் விலை அதிக ரிக்கும். ஆனால் உக்ரைன்- ரஷ்யா, லெபனான்- இஸ்ரேல் மோதல் பின்னணியில் ஒபெக் பிளஸ் நாடுகள்  உற்பத்தியைக் குறைத்து செயற்கையாகப் பற்றாக்குறையை உருவாக்கிய போதும் கச்சா  எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை.  கடந்தாண்டு ஏப்ரலில் ஒரு பேரல் கச்சா எண் ணெய் 89 டாலராக இருந்தது. ஆனால் இந்த அக்டோபரில் அது 76 டாலராகவே இருக்கிறது. 

அப்படியிருந்தும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஏன் கடும் வீழ்ச்சியடைய வேண் டும்? உண்மையில்  இந்தியப் பொருளாதாரம்  மிக வும் இக்கட்டான நிலையில் இருக்கிறது என்பதன் எச்சரிக்கையே ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி. அதனை மறைக்க மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவது, பொருட்களின் விலையை உயர்த்துவது என மக்க ளின் தலையில்தான் மேலும் சுமை  ஏற்றப்படும். கூடிய விரைவில் ‘வளர்ச்சி  முகமூடி’ கிழிந்து உண்மை வெளிவரும்.