“நல்ல காலம் பிறக்கப் போகுது” எனக் குடுகுடுப் பைக்காரர் குறி சொல்வது போல் பிரதமர் மோடி யும் நாட்டின் மகள்களுக்குச் சிறப்பான வாய்ப்புகள் வரப்போகிறது எனக் கூறியிருக்கிறார்.
2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒன்றிய அரசின் “பேட்டி பச்சாவ் பேட்டி படோவோ” (பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தை களுக்குக் கற்பிப்போம்) என்ற திட்டம் பெரும் மாற்றத்தை உருவாக்கியிருப்பதாகவும், புதிய மைல் கல்லை எட்டியிருப்பதாகவும் பெருமைப் பட்டிருக்கிறார். ஆனால் இந்த திட்டம் உண்மை யில் வெற்றி பெற்றிருக்கிறதா என்றால் இல்லை. மாறாக தோல்வியையே தழுவியிருக்கிறது என பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தின் அமலாக்கம் எப்படி இருந் தது என்பதை 2021 ஆம் ஆண்டு மகளிருக்கான அதிகாரம் அளிக்கும் நாடாளுமன்றக்குழு அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. அதில் 2016-ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை இத்திட்டத்திற்கு ரூ.446.72 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் 78.19 சதவீதம் தொகை ஊடக விளம் பரத்திற்கே செலவிடப்பட்டிருக்கிறது. அதில் வெறும் 10 சதவீதம் சுகாதாரத்துறை சார் செயல் பாடுகளுக்கும், 10 சதவீதம் கல்விக்காகவும் செல விடப்பட்டிருக்கிறது. அதாவது திட்டத்தின் நோக் கத்தை நிறைவேற்றுவதற்கு மாறாக மோடி அரசு சுயவிளம்பரத்திற்காக 80 சதவிகித தொகையைப் பயன்படுத்தியிருக்கிறது.
இந்த அறிக்கை வெளிவந்த பின்னணியில் 2018-19 மற்றும் 2022-23க்கு இடையில், இந்த திட்டத் திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 63 சதவிகிதம் குறைக் கப்பட்டது. இந்திட்டம் எப்படி சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியும்? மேலும் இந்த திட்டம் பாலின பாகுபாடுகளை அகற்றும் கருவியாக விளங்கியிருக்கிறது எனவும் பிரதமர் புளகாங்கிதமடைந்திருக்கிறார்.
ஆனால் உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையின் படி, 2016 ஆம் ஆண்டில் 144 நாடுகளில் இந்தியா 87ஆவது இடத்தில் இருந்தது. 2024 ஆம் ஆண்டில் 146 நாடுகளில் 129 ஆவது இடத்திற்குத் தள்ளப் பட்டிருக்கிறது. அப்படியிருக்கையில் இத்திட்டத் தால் பாலின இடைவெளி குறைந்திருக்கிறது என்று எப்படி கூறுகிறார்?
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என் கிறது. இந்திய பொருளாதார வளர்ச்சியில் 2005 இல் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு 32 சதவிகித மாக இருந்தது. அதுவே 2021 இல் 19 சதவிகித மாக குறைந்திருக்கிறது.
இத் திட்டம் வந்த பின்பு பெண்களுக்கு எதிரான குற்றங்களாவது குறைந்திருக்கிறதா என்றால் அதுவுமில்லை. தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத் தரவுகளின்படி 2014க்கும் 2022க்கும் இடை யில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண் ணிக்கை 30 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 86 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக் கப்பட்டிருக்கின்றனர். இதுதான் ஒன்றிய மோடி அரசு பெண்களை பாதுகாக்கும் லட்சணம்.