headlines

img

நாக்பூர் கலவரம் நமக்கு மற்றும் ஒரு எச்சரிக்கை

நாக்பூர் கலவரம்  நமக்கு மற்றும் ஒரு எச்சரிக்கை

மார்ச் 17 அன்று நாக்பூரில் நடந்த கலவரம் ஒரு அபாயகரமான போக்கை எடுத்துக்காட்டுகிறது முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ஆர்எஸ்எஸ் - பாஜக மதவெறியர்கள் வன்முறையில் ஈடுபட்டனர், இதன் விளைவாக நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக நிலையங்கள் தீக்கிரையாகின.

300 ஆண்டுகளுக்கும் முன்பு மறைந்துவிட்ட ஒரு ஆட்சியாளரின் கல்லறை ஏன் இன்றும் இத்தகைய உணர்ச்சிகளைத் தூண்டுகிறது? இதற்கான விடை அன்றைய வரலாற்றில் அல்ல, மாறாக நவீன மதவாத, அரசியல் சூழலில் உள்ளது.

நாக்பூரில் நடந்த இந்த கலவரம் தற்செய லான வன்முறை அல்ல. பாஜக மற்றும் அதன்  மாநில அரசு பகிரங்கமாக இத்தகைய மோதல்க ளைத் தூண்டியுள்ளது என்பதை நாம் வன்மையா கக் கண்டிக்க வேண்டும். ஒரு ஆளும் கட்சி மத ரீதியான பிளவுகளை ஊக்குவிக்கும்போது, அது ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளுக்கே எதிரானதாகும்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் உண்மையில் வரலாறு தொடர்புடையவை அல்ல. இவை தற்போதைய அரசியல் இலாபங்களுக்காக திட்ட மிட்டு உருவாக்கப்பட்ட பதற்றங்களாகும். வரலாற்று நபர்கள் அடையாள அரசியலின் குறி யீடுகளாக மாற்றப்படுகின்றனர் - அவர்களின் சிக்கலான பாரம்பரியம் முன்னிறுத்தப்பட்டு, ஆளும் கட்சியின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

இன்றைய சமுதாயத்தில் நிலவும் அடிப் படை பிரச்சனைகளான வேலையின்மை, விலை வாசி உயர்வு, சமூக பாதுகாப்பின்மை போன்றவற்றி லிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கு இத்த கைய விவாதங்கள் கருவியாக்கப்படுகின்றன. பொதுமக்களின் வாழ்க்கையை மேம்படுத்து வதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுப்ப தற்குப் பதிலாக, பாஜக மற்றும் அதன் மாநில அரசு மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, சமூகங்க ளுக்கிடையே வன்முறையை தூண்டி அரசியல் ஆதாயம் பெறுகின்றனர். இது ஒரு ஆபத்தான அரசியல் விளையாட்டு.

வரலாற்றைப் பற்றிய விவாதங்கள் அவசியம், ஆனால் அவை அறிவார்ந்த முறையிலும், பரஸ்பர மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும், அரசியல் தூண்டுதல்களுக்காக அல்ல.

நாக்பூர் சம்பவம் அனைத்து இந்தியர்களுக் கும் ஒரு உரையாடலுக்கான அழைப்பாக அமைய வேண்டும். சமூக ஒற்றுமையைக் காப்பாற் றுவதே அனைவரின் முதன்மையான பொறுப்பா கும். நாம் வன்முறை மற்றும் பிளவுகளுக்கு பதி லாக, பரஸ்பர புரிதல் மற்றும் சகிப்புத்தன்மைக்கு குரல் கொடுக்க வேண்டும்.

வரலாற்றின் நிழலில் பாஜக நவீன பாசிசப் பாதையை தீவிரப்படுத்தினாலும், நாம் ஒளியின் பாதையைத் தேர்ந்தெடுத்து, முறியடிப்போம்.