headlines

img

நீதியை நிலைநாட்ட நெடும் போராட்டம்

கர்நாடக மாநிலத்தில்  பட்டியலின மக்களுக்கு எதிரான தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 98 பேருக்கு ஆயுள் தண்டனை  விதித்து கொப்பல் மாவட்ட முதன்மை நீதி மன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 98 பேருக்கும் ஒரே நேரத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரிய வழக்குகளில் இதுவும் ஒன்றாகும். 

கொப்பல் மாவட்டம், கங்காவதி தாலுகா வில் உள்ள மருகும்பி கிராமத்தைச் சேர்ந்த பட்டி யலின இளைஞர்கள் சிலர் 2014 ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்கு ஒன்றில் படம் பார்க்கச் சென்றனர். முடிதிருத்தும் கடைகள் மற்றும் ஓட்டல்களுக்குள் நுழைய அவர்களுக்கு வேறு சமூகத்தினர் அனுமதி மறுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த வேறு சமூகத்தை சேர்ந்த சிலர், பட்டியலின மக்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நீதி கோரி கொப்பலில் இருந்து பெங்களூரு வரை பாத யாத்திரை நடத்திய பின்னரே இந்த சம்பவம் நீதிமன்றத்தின் கவனத்தைப் பெற்றது. 

இந்த வழக்கில் மொத்தம் 117 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 101 பேருக்கு தண்டனை வழங்கப்பட்ட போதிலும்  வழக்கு விசாரணை யின்போது குற்றம் சாட்டப்பட்டவர்களில்  16 பேர் இறந்துவிட்டனர்.  நீதிமன்றத் தீர்ப்பு அறிவிக்கப் பட்டதும், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் இப்போதாவது நீதி நிலை நாட்டப்பட்டுள்ளதே என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இது போன்ற வழக்கில் கருணை காட்டுவது நீதியை கேலி செய்யும் செயலாகும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும் இன்றும் நாட்டின் பல பகுதிகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்கின்றன. பல சம்பவங்களில் வழக்குகள் பதிவு செய்யப்படு வதே இல்லை. போராட்டத்தால் தரப்படும் அழுத் தத்தின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் படாத காரணத்தால் சாதி ஆதிக்க சக்திகள் தண்டனையில் இருந்து தப்பி விடுகின்றனர். அரிதான வழக்குகளில் மட்டுமே குற்றவாளி களுக்கு தண்டனை உறுதிப்படுத்தப்படுகிறது.   

மருகும்பி வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்ன ணியும் களத்திலும் நீதிமன்றத்திலும் தொடர்ச்சியாக போராடி வந்தன. போராடினால் தான் நீதி கிடைக்கும் என்ற நிலைமை வேதனை யானது. இன்னும் எத்தனை ஆண்டு காலம் தான் பட்டியலினத்தவர்கள் பாதிக்கப்படக் கூடிய வர்களாகவே இருக்கப் போகிறார்கள்!