headlines

img

தப்பி ஓட முடியாது மோடி அரசு

பொருளாதார மந்த நிலை மேலும் மேலும் தீவிரமடைவதற்கும், வேலையின்மை இன்னும் கூர்மையாக மக்களை தாக்கத் துவங்கியிருக்கி றது என்பதற்கும் மற்றுமொரு அழுத்தமான சாட்சியமாக மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் முழுமையாக இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், இப்போதே கிட்டத்தட்ட காலியாகிவிட்டது என்ற அதிர்ச்சி  தகவல் வெளியாகியுள்ளது. 

நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கியிருந்தது. ஆனால் அது முந்தைய ஆண்டுகளில் ஒதுக்கப் பட்ட நிதியை விட குறைவு ஆகும். ஏற்கெனவே வைக்கப்பட்டிருந்த ஊதிய பாக்கிகள் தொடர்ந்து நிலுவையிலேயே இருக்க, இந்தாண்டு, வெறும் ரூ.2500 கோடி மட்டுமே மிச்சமிருக்கிறது. அடுத்த 60 நாட்களுக்கு இந்தத் தொகை நிச்சயமாக போதாது என்று அதிகாரிகள் கைவிரித்துள்ளனர். 

ஏன் இந்த நிலை என்பது ஆய்வுக்குரியது.  ஏற்கெனவே நெருக்கடியின் உச்சத்தில் விவ சாயம் சிக்கியதால் அதிலிருந்து வெளியேறி நகர்ப்புறங்களுக்கு வேலைதேடி வந்த மக்களின் எண்ணிக்கை இந்தாண்டு மிகவும் அதிகரித்துள் ளது. இப்போது நகரங்களிலும் வேலையில்லை. எனவே மீண்டும் கிராமப்புறங்களில் வேலை தேடும் படலம் தீவிரமடைந்துள்ளது. கிராமப் புறங்களில், மகாத்மா காந்தி வேலையுறுதித் திட்டத்தை தவிர வேறு உருப்படியான வேலை வாய்ப்பு எதுவுமில்லை. எனவே இத்திட்டத்தின் கீழ் வேலை கேட்டு வரும் உழைப்பாளிகள் எண்ணிக்கை பெரிய அளவிற்கு அதிகரித்தி ருக்கிறது. இது ஒரு முக்கியமான, அரசு கவ னத்தில் கொள்ள வேண்டிய மிக அடிப்ப டையான பிரச்சனை. இந்தியா வேலையின்மை யின் உச்சத்தில் தத்தளித்து நிற்கிறது என்பதை இனியும் மோடி அரசு ஒப்புக் கொள்ள மறுத்து தப்பி ஓட முடியாது. இதுமட்டுமல்ல, நாடு முழுவதும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் கிராமப்புறங் களில் விவசாய வேலையும் பெரிதாக இருக்கப் போவதில்லை. எனவே இந்தக் குறிப்பிட்ட மாதங்களில் இன்னும் கூடுதலாக வேலை யுறுதித் திட்டத்தின் கீழ் வேலை கேட்டு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறது. ஏற்கெனவே தமிழகம் உட்பட பல மாநிலங்களில் 2019 அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான ஊதியமே பல்லாயிரம் கோடி நிலுவையில் இருக்கிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் வேலையுறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் கடுமையாக குறைக்கப்பட்டுள் ளன. கூலியும் முழுமையாக விவசாய தொழிலா ளிகளின் கைகளில் சென்று சேரவில்லை. கூலி பாக்கி கேட்டு விவசாயத் தொழிலாளர் சங்கம் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியிருக்கிறது.

பொருளாதார மந்தம், பிரதான தொழில்கள் சீர்குலைவு உள்ளிட்ட காரணங்களால் வேலை யின்மை உச்சக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கிராமப்புற வேலையுறுதித் திட்டமும் கடுமை யான நிதிப் பற்றாக்குறையின் பிடியில் சிக்கியி ருப்பது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் படு குழியில் தள்ளும் பெரும் அபாயமாகும். அடுத்த பட்ஜெட்டுக்கு தயாராகி வரும் மோடி அரசு இத்திட்டத்திற்கு மிக அதிகபட்ச நிதி ஒதுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

;