headlines

img

தேசம் காக்கும் போராட்டம்

பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாப்பது என்பது லாபநட்ட கணக்கு பார்க்கும் வியாபார மல்ல. அது தேசத்தைப் பாதுகாக்கும் தேசபக்த கடமை என்று கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு முன்னெடுத்து வருகிறது. 

கேரள மாநிலம் காசர்கோடு பெல் - இஎம்எல் நிறுவனம் மற்றும் கோட்டயம் வெல்லூரில் உள்ள இந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் நிறுவனத்தையும் நஷ்டம் எனக் கூறி மோடி அரசு விற்றுத் திங்க முடிவு செய்தது. அதே நேரம்  கேரள அரசு அதனை ஏற்று நடத்த தயார் என அறிவித்தது. சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும்  மோடி அரசு அதனை ஒப்படைக்க மறுத்து ஏலத்திற்கு விட்டது. ஏலத்தில் பங்கேற்ற கேரள இடதுசாரி அரசு இரண்டு நிறுவனங்களையும் கைப்பற்றி தற்போது பொதுத்துறை நிறுவனமாக மாற்றியிருக்கிறது. 

ஒரு மாநில அரசால், நஷ்டமாகும் பொதுத் துறை நிறுவனத்தை எடுத்து லாபத்தில் இயங்க வைக்க முடியுமெனில் ஒன்றிய அரசால் முடியா தா?  இங்கே பிரச்சனை அந்த நிறுவனமா, அல்லது நிர்வாகத் திறமையின்மையா,  அல்லது ஒன்றிய அரசு பின்பற்றும் கொள்கையா என்பதை மக்கள் ஆராய்ந்தறிய வேண்டும்.  மோடி அரசு வழக்கம் போல் தனது நிர்வாகத் தோல்வியையும், பொரு ளாதார தோல்வியையும் மூடி மறைக்க இதுவரை பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டம் எனக் கூறி வந்தது. ஆனால் தற்போது லாபத்தில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் கூறு கட்டி விற்க முனைந்திருக்கிறது. 

அதற்கு ஒன்றிய அரசு சொல்லும் காரணம் நாடு கஷ்டத்தில் இருக்கிறது. அதனால் பொதுத்துறைக ளைப் பணமாக்கப் போகிறோம் என்கிறது. அது உண்மையா என்றால் அதுவும் மிகப்பெரிய பித்த லாட்டமாகவே இருக்கிறது. உதாரணமாக சென்ட ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (செல் ) நிறுவனம் லாபத்தில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனம் ஆகும். அதன் மதிப்பு  ரூ.957 கோடியிலிருந்து ரூ.1600 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் மோடி அரசு நந்தல் பைனான்ஸ் அண்ட் லீசிங் பிரைவேட் லிமிட்டெட் என்ற தனியார் நிறு வனத்திற்கு வெறும் ரூ.210 கோடிக்கு மட்டுமே விற்றிருக்கிறது. 

அந்த நிறுவனத்தின் 2020-21ஆம் நிதியாண்டின் லாபம் மட்டும் ரூ.136 கோடி ஆகும். அந்நிறுவ னத்தின் கையில் இருக்கும் ஆர்டர்களை மட்டும் நிறைவேற்றினால் ரூ.730 கோடி கிடைக்கும். இதில் எங்கே இருக்கிறது பணமாக்கல்? மொத்தத்தில் மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களைப் பிண மாக்கல் வேலையைத்தான்  செய்து வருகிறது. 

கேரள அரசு ஒன்றும் மிகவும் வசதி படைத்த அர சல்ல. மாறாக 2016 முதல் 2021 வரை இரண்டு மிகப் பெரிய இயற்கைச் சீற்றங்கள் மாநிலத்தின் பொருளாதாரத்தையே நிலைகுலையச் செய்தது. அப்போது கூட ஒன்றிய அரசு போதிய உதவி செய்யவில்லை. அதையடுத்து கொரோனா உள்ளிட்ட பெருந்தொற்றையும் எதிர்கொண்டு வரு கிறது.  நேர்த்தியான திட்டமிடல், மிக அரிதான வளங்களை முறையாகப் பகிர்ந்து அளிப்பது, எந்த ஒரு பிரிவினரும் வளர்ச்சிப் பாதையில் விடுபடா மல் பார்த்துக் கொள்வது ஆகிய மூன்றையும் முன் னெடுத்து இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது. தேசம் காக்கும் போராட்டத்தில் கேரள இடதுசாரி அரசே மாற்று.