நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள சூழ்நிலையில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குப் புதுச்சேரி நிதிநிலை குறித்து இப்போதுதான் அக்கறை வந்துள்ளது. வெள்ளிக் கிழமை புதுச்சேரி வருகை தந்த அவர் அம்மாநில வளர்ச்சிப்பணிகள் குறித்து துணை நிலை ஆளுநர், முதல்வர் அமைச்சர்கள் உள்ளி்டோரி டம் ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது தேர்தல் அறிக்கை வெளியிட்டு, பிரச்சாரம் செய்த பிறகு தற்போது தான் நிர்மலா சீதாராமன் புதுச்சேரிக்கு வந்துள்ளார்.
தென் மாநிலங்களில் பாஜக போட்டியிட உத்தேசித்துள்ள தொகுதிகளின் பட்டியலில் புதுச்சேரியும் உள்ளதாகக் கூறப்படுகிறது. தற் போது காங்கிரஸ் வசம் உள்ள அந்த தொகுதியைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. இதற்காக, புதுச்சேரிக்கு பல்வேறு திட்டங்களை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது போன்று ஒரு பொய்யான தோற் றத்தை ஏற்படுத்த நிதியமைச்சர் பார்க்கிறார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் ‘இரட்டை என்ஜின்’ ஆட்சி நடைபெறுவதால் தங்கு தடை யின்றி வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதாகத் தம்பட்டம் அடிக்கிறார்கள். உண்மை நிலை என்னவென்றால் புதுச்சேரியிலும் ஒன்றியத்தி லும் பாஜக கூட்டணி அரசு உள்ள போதிலும் வளர்ச்சிக்கான எந்தப் பணிகளும் நடைபெற வில்லை. ஒன்றிய அரசிடமிருந்து புதுச்சேரிக்கு ஒரு ரூபாய் கூடக் கூடுதலாக நிதி உதவி கிடைக்க வில்லை. என்.ஆர். காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசுக்குத் தலைமை வகிக்கக்கூடிய முதல்வர் ரங்கசாமி பல்வேறு காரணங்களால் இதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களு க்கு ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை வழங்குவது 2022 ஜூன் மாதத்துடன் நிறுத்தப்பட்டுவிட்டது. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் எஞ்சியிருந்த மாநில வருவாயும் பறிபோனதுதான் மிச்சம். ரிசர்வ் வங்கியின் சமீ பத்திய அறிக்கையின் படி ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத் தப்பட்டதால் 10 சதவீதம் அளவிற்கு நிதி இழப்பீடு பெற்றுவந்த புதுச்சேரி உள்ளிட்ட சிறிய மாநிலங்கள் மேலும் நெருக்கடியை சந்திக்கப்போகின்றன.
ஒன்றிய பாஜக அரசு புதுச்சேரி மாநில தேவை களைப் பற்றியோ, மக்களின் நலனை பற்றி சிறி தும் கவலைப்படாமல் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. உதார ணத்திற்கு நாட்டிலேயே ரேசன் கடைகள் இல்லாத மாநிலமாகப் புதுச்சேரியை மாற்றியது; ஜவுளி பூங்கா என்ற பெயரில் தனியார் பஞ்சா லைகளுக்குக் கோடி கோடியாக நிதி ஒதுக்கியது; புதுச்சேரியின் அடையாளமான கூட்டுறவு பஞ்சாலைகளுக்கு நிதி ஒதுக்காமல் அவற்றை, நிரந்தரமாக மூடிவிட்டது.
இப்போது லாபத்தில் இயங்கிவரும் மின்துறை சொத்துக்களைச் சூறையாடி, தனியாருக்கு தாரை வார்க்கத் துடித்துக்கொண்டிருக்கிறது. எனவே புதுச்சேரியைத் தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய அரசுக்கு வரும் மக்களவைத் தேர்தலி லும் புதுச்சேரி மக்கள் தக்க பாடம் புகட்டத் தயாராகி வருகிறார்கள்.