நாடுமுழுவதும் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை வேலையின்மை விகிதம் 22.9 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் நகர்ப்புற வேலையின்மை இரட்டை இலக்க விகிதத்தில் உள்ளது. 15வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் தான் அதிக வேலையின்மை காணப்படுகிறது.
நகர்ப்புற வேலையின்மை மட்டுமல்ல, ஊரகப் பகுதிகளிலும் வேலைவாய்ப்பு இல்லை. கொரோனா தொற்றுக்குப் பின்னர் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. இதனால், கிடைக்கிற வேலையைச் செய்து பொருளீட்டு வது என்ற மனநிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ள னர். பொருட்கள் உற்பத்தி, வீடுகளுக்கு உணவுப் பொருட்களை விநியோகம் செய்தல், ஓட்டுநர் உள்பட பல வேலைகளில் குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் நிலையில் இன்றைய இளை ஞர்கள் உள்ளனர். தனியார் துறை வேலைவாய்ப்பு களில் பணிப் பாதுகாப்பு இல்லை. மேலும் பல மணி நேரம் சுரண்டப்படுவதோடு உரிய சம்பளம் தரப்படுவதில்லை. இதனால் மன அழுத்தம் தான் அதிகரித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களில் கணிசமானோர் வீடுகளி லிருந்து பணியாற்றலாம் என்ற பெயரில் கூடு தல் நேரம் பணிபுரியக் கட்டாயப்படுத்தப்பட்டு ள்ளனர். கொரோனா தொற்றால் பல மாதங்கள் ஊரடங்கு அமலிலிருந்த காரணத்தால் சிறு, குறு, நடுத்தர ஆலைகள், உணவகங்கள் நடத்தி வந்தவர்களில் பலர் இழப்பை எதிர்கொள்ள முடி யாமல் தாங்கள் பயன்படுத்திய சாதனங்களை விற்றுவிட்டுச் சென்றுவிட்டனர். ஒட்டுமொத்த மாகப் பார்த்தால், முந்தைய ஆண்டுகளைவிடத் தற்போது வேலையின்மை கணிசமாக அதி கரித்துள்ளது. இதற்கு மாறாக, புது வேலைவாய்ப்பு களும் ஏற்படுத்தப்படவில்லை. நாடாளுமன்றத் தில் அரசு அளித்த அதிகாரப்பூர்வ தகவல்படி பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு தமிழகத்தில் 38ஆயிரத்து 125 நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. இந்த நிறுவனங்களில் பணிபுரிந்த வர்கள் தற்போது அமைப்பு சாரா தொழிலாளர் களாக மாறியுள்ளனர்.
இந்த நிலையில், அரசுப் பணிகளில் ஆயிரம் காலியிடங்கள் என்றாலே லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கும் நிலை உருவாகியுள்ளது.ரயில்வேயில் கலாசி வேலைக்கு எம்.ஏ., எம்.பில்., படித்தவர்களும் விண்ணப்பிக்கிறார்கள்.
தூர்தர்ஷன், வானொலி நிலையம் உள்ளிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்களில் கடந்த பத்தாண்டு களில் ஏராளமானோர் ஓய்வுபெற்றுவிட்டனர். ஆனால், காலியிடங்களுக்குப் புதிதாக ஆட்களை எடுக்காமல் ஒப்பந்த அடிப்படையில் குறைந்த சம்பளத்திற்கு ஊழியர்கள் நியமிக்கப்படுவது அநீதியாகும். வேலை யின்மையால் இளைஞர்களின் துயரம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவாகி வருகிறது. இதற்கு மன நல ஆலோசனைகள் மட்டும் தீர்வாகி விடாது. விபரீத எண்ணங்களுக்கு அவர்கள் இரையாகிவிடாமல் தடுத்து நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகள் உரிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதுதான் சரியான தீர்வாக இருக்கும்.