headlines

img

இவர்களுக்கே பாதுகாப்பில்லை

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் பயிற்சியாளர் கள் மீது பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்து தலைநகரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக் கும் பிரிஜ் பூஷன்  பாஜகவின் எம்பி என்பதால் இது வரை அவர் கைதுசெய்யப்படவில்லை. சர்வதேச அளவில் புகழ்பெற்ற வீராங்கனை விஷ்ணு போகத் உள்ளிட்ட வீராங்கனைகளின் புகார் குறித்து தில்லி காவல்துறையும் வழக்குப் பதிவு செய்யவில்லை. 

ஆசிய மற்றும் ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் நாட்டின் பெருமையை உயர்த்திய வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பது வேதனையளிக்கிறது. வீராங்க னைகளுக்குப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகளையும் செய்து தரவேண்டிய வர்களே மோசமாக நடந்து கொண்டால் அவர்கள் எங்கே செல்வார்கள்?

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தோல்வி யடைந்த வீராங்கனைகள்  தங்களின் எதிர்காலம் குறித்து கவலையுடன் இருக்கும்போது அவர்க ளைச் சுரண்டும் வகையில் நடந்துகொண்டிருக்கி றார்கள்.  மேலும் பெண் வீராங்கனைகளை இரட்டை அர்த்தத்தில் அழைப்பது போன்றவை கேவலமானது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலை யிட்டு  சீரழிப்பதாகவும்  வீராங்கனைகள் சொல்லி யிருக்கும் குற்றச்சாட்டு கடுமையானது. இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் சம்பந்தப் பட்ட நிர்வாகியை பதவி விலகுமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்  விளக்கமளிக்க 72மணிநேர அவகாசம் வழங்கியி ருப்பது சரியல்ல.

பாஜகவுக்கு எதிராக உள்ள மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் அமைதி காப்பது ஏன்? பயிற்சியின் போது பிசியோதெரபி இல்லை என்றும் அதற் காகக் குரல் கொடுத்தவர்களைச் சம்மேளனம் பழி வாங்குவதையும் தொடர்ந்து மிரட்டுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வழக்கில் அந்த பெண்கள் தான் முக்கிய சாட்சியாக இருக் கப்போகிறார்கள். எனவே அவர்களுக்கு தில்லி காவல்துறை பாதுகாப்பு அளிக்கவேண்டும். 

வீராங்கனைகளின் போராட்டத்தைக் குடி யுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான ஷாஹீன் பாக் தர்ணா  என்று கூறி கொச்சைப்படுத்துவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு பாஜக எம்.பி மதச் சாயம் பூசப்பார்க்கிறார்.  எனவே தற்போதுள்ள  இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட வேண்டும். குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தலை வர் மற்றும் பயிற்சியாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனே கைதுசெய்ய வேண்டும்.  பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு களை விசாரிக்க விசாரணைக் குழுவை ஒன்றிய அரசும் ஒலிம்பிக் சங்கமும் அமைத்து பார பட்சமில்லாமல் விசாரணை நடத்தி நீதியை நிலை நாட்ட வேண்டும்.