நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப் படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள் ளது. இதனால் பழங்குடியின மக்களுக்கு வழங் கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் - குருவிக்காரர் பிரிவினருக்கும் இனி கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதுக்கோட்டை, திருச்சி, பெரம்ப லூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட் டங்களில் நரிக்குறவர் சமுதாயத்தினர் அதிகளவு வசித்து வருகின்றனர். இந்த சமூகத்தினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருப்பதால் கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பின் தங்கியுள்ளனர். எனவே, தங்கள் சமூகத்தினரைப் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்க ளாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். 1965ஆம் ஆண்டு லோக்கூர் குழு நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால் ஒன்றிய அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் நீண்டகாலமாகப் போராடி வந்தது. 2008-09 ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த போது இந்த கோரிக்கை தொடர்பாகத் திரு வண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தைச் சேர்ந்த நரிக்குறவர் தடராம்சிங் என்பவருடன் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத், பெ.சண்முகம் மற்றும் மலைவாழ் மக்கள் சங்க பிரதிநிதிகள் அன்றைய மத்திய பழங் குடியினர் நலத்துறை அமைச்சரை டில்லியில் சந்தித்துப் பேசினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ச்சியாகப் போராடி வந்தனர்.
பல ஆண்டு போராட்டத்திற்கு தற்போது தான் பலன் கிடைத்துள்ளது. ஒன்றிய அரசின் நட வடிக்கை தாமதமான நடவடிக்கை என்றாலும் வரவேற்கத்தக்கது. இருந்தாலும் மலையாளிகள் என்று அழைக்கப்படும் ஒரு பிரிவினர் பல மாவட் டங்களில் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இவர்கள் “ஈரோடு மலையாளி’’ என்று வகைப்படுத்தி மிகவும் பிற் படுத்தப்பட்டோர் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். அதே போல் புலயன் என்று அழைக்கப்படுவோர் எஸ்சி பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு பிரிவினரும் பல ஆண்டுகளுக்கு முன்பு எஸ்டி பட்டியலில் இருந்தவர்கள் தான். ஆனால் இடையில் விடுபட்டுள்ளனர்.
இந்த மக்கள் மலைகளிலும் காடுகளில் வாழ்ந்து வருகின்றனர். தங்களது குழந்தைகள் கல்வி வளர்ச்சி பெறவும் வேலைவாய்ப்பு பெறவும் இதர அடிப்படை வசதிகள் பெறவும் பழங்குடியினர் பட்டியலில் தங்களை சேர்க்க வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நியாயமான கோரிக்கையை யும் ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும். இதற்காகத் தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு போதுமான அழுத்தத்தைத் தரவேண்டும்.