headlines

img

அதிகாரமில்லை!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன் லைன் சூதாட்ட தடை சட்ட வரைவிற்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழக அரசிற்குத் தடை செய்ய அதிகாரமில்லை எனக் கூறி  திருப்பி அனுப்பியிருக் கிறார். முதலில் தமிழக அரசிற்கு அதிகாரமில்லை என்று கூறுவதற்கு  ஆளுநருக்கு எவ்வித அதிகார மும், அருகதையுமில்லை என்பதை ரவி புரிந்து கொள்ள வேண்டும். 

கடந்த ஆண்டு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு இதே ஆளுநர் தான் ஒப்புதல் அளித்தார். அப்போது மாநில அர சிற்கு இருந்த அதிகாரம் இப்போது  எப்படி திடீரென காணாமல் போனது?  ஆன்லைன் ரம்மி விளை யாட்டில் வேண்டுமானால்  ஜோக்கர் வெற்றியைத் தீர்மானிக்கலாம். ஆனால் தமிழக மக்களின் உயி ரோடு விளையாட நினைத்தால், கோமாளி கொள் ளிக்கட்டையைக் கொண்டு முதுகு சொறிந்த கதையாக மாறிவிடும்!

ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அரசியலமைப்புச் சட்டத் தின் 246-ஆவது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை மாநில அரசுகள் இயற்றலாம். அதுமட்டுமின்றி, 162-ஆவது பிரிவின்படி ஆன் லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கான நிர்வாக அதிகாரமும் மாநில அரசுகளுக்கு உண்டு என்று நாடாளுமன்றத்திலேயே தெளிவுபடுத்தி யிருக்கிறார்.  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராகச் சட்டம் இயற் றப்பட்டிருக்கிறது. 

அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றமும், ஆன் லைன் சூதாட்டம் வாய்ப்புக ளின் அடிப்படையிலான சட்டம் என்பதை உறு திப்படுத்துவதற்கான தரவுகளுடன் திருத்தப்பட்ட சட்டத்தை இயற்றலாம் என்றுதான் கூறியி ருக்கிறது. இந்த தீர்ப்பிற்கு பின் தமிழகத்தில் இதுவரை 47 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டி ருக்கின்றனர். இவர்களில் 18 பேர் கடந்தாண்டு புதிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றப்பட்ட பின்னர் உயிரிழந்தவர்கள். இதற்கு ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும். ஆளுநர் ரவி ஆர்எஸ்எஸ் பவனிலிருந்து செயல்படுவது போல், ஆளுநர் பவ னிலிருந்து செயல்படக்கூடாது. கடந்தாண்டு அக் டோபர்19இல் இயற்றி அனுப்பிய சட்ட வரைவை 142 நாட்கள் கழித்து தற்போது திருப்பியனுப்பியதன் உள் நோக்கம் என்ன ?

வடமாநிலத்தவர் மத்தியில் தமிழகத்திற்கு எதிராக  வதந்தியை பரப்பி கலவரத்தை உருவாக்க முயன்ற பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பலின் முகமூடி கிழிந்து சந்தி சிரிக்கிறது. இந்த நேரத்தில் ஆன் லைன் ரம்மியை கையிலெடுத்து தமிழக மக்களின் கவனத்தைத் திருப்ப ஆர்ஆர்எஸ் அடியாளாக ரவி  நேரடியாகக் களமிறங்கினாலும், அது பூமாரங் போன்றே  திருப்பி தாக்கும். ஆன்லைன் ரம்மியின் கூட்டாளி போன்று செயல்படும் ஆளுநரின் அர சியல் சதியை முறியடிக்க, தமிழக அரசு தடை சட்டத்தை உடனே  நிறைவேற்றி மீண்டும் அனுப்பிட வேண்டும். மாநில சுயாட்சி உரிமை காத்திட தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக அனைத்து மக்களும் கரம் கோர்த்திடுவார்கள்.