headlines

img

சிதைக்கும் நோக்கம்!

ஒன்றிய அரசு  அனைத்து நகர கூட்டுறவு வங்கிகளையும் ஏற்கனவே  ரிசர்வ் வங்கி கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது.  இந்தநிலை யில் புதிய தேசிய கூட்டுறவு கொள்கையை உரு வாக்க முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது.  மாநிலத்தின் பொருளாதாரத்தி லும்  கூட்டுறவு அமைப்புகள் முக்கியப் பங்காற்று கின்றன.  இச்சூழலில்,  ஒன்றிய பாஜக அரசு தனி யாக கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கியிருப் பது, மாநில அரசுகளின் அதிகாரத்தையும் உரிமை யையும் பறிக்கும் முயற்சியே தவிர வேறு இல்லை.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களில், அனைத்து துறைகளிலும் கூட்டுறவு அமைப்புகள் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளன. வேளாண்மை, கட்டுமானம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், உணவ கங்கள், காய்கறி விற்பனை, பண்டக சாலைகள், பொது விநியோகம் என பன்முக பணிகளில் கூட்டு றவு அமைப்புகள் ஈடுபட்டு மக்களுக்கான இயக்க மாக மாறி உள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக திரு வள்ளூர் மாவட்டம் திரூர் என்ற கிராமத்தில்தான் விவசாயிகளுக்கு என முதல் கூட்டுறவு கடன் சங்கம் 1904இல் ஏற்படுத்தப்பட்டது. நாட்டின் விடு தலைக்கு பிறகு, கூட்டுறவு அமைப்புகள் வாயி லாக தான், வறுமை ஒழிப்பு, பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, சிறுதொழில் விரிவாக்கம், சமூகநலத்திட்டங்கள் அமலாக்கம், ஐந்தாண்டு திட்டப் பணிகள், கைத்தறி, வீட்டுவசதி, பொது விநி யோகம் என பன்முகத்தன்மையுடன் கூட்டுறவு அமைப்புகளின் பணி விரிவடைந்துள்ளது..

ஆனால் ஒன்றிய அரசின் கூட்டுறவு அமைச்ச கமும், அதற்கான கொள்கை உருவாக்கமும், சாதாரண ஏழை எளிய  மற்றும் நடுத்தர மக்களுக் கும் விவசாயிகளுக்கும் தங்களின் வாழ்வாதாரத் திற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும் கூட்டுறவு அமைப்புகளின் நோக்கத்தை சிதைத்துவிடும். 

கூட்டுறவு அமைப்புகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் மக்களின் வைப்புநிதி உள்ளது. பொதுத் துறை வங்கிகளில் தனியார் பெரு முதலாளிகள் கடன் வாங்கி திருப்பிசெலுத்தாத தொகை 2021 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.1.9லட்சம் கோடி. பொதுத் துறை வங்கிகளின் மொத்த வராக்கடன் மோடி ஆட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளில் இரு மடங் காக அதிகரித்துள்ளது.  2014ல் ரூ.2.24 லட்சம் கோடி யாக இருந்த நிலையில், 2021ல் ரூ.5.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மாநிலங்களவை யில் அரசே தெரிவித்தது.  

இந்த நிலையில் கூட்டுறவு அமைப்புகளிலும் மாநில அரசுகளின் அதிகாரம் முற்றிலும் பறிக்கப் பட்டு, அனைத்து அதிகாரமும் ஒன்றிய அரசின் வசம் சென்றால் பொதுமக்களின் கோடிக்கணக் கான வைப்புத்தொகை பெருமுதலாளிகளின் வராக் கடனாகவே மாறிவிடும். எனவே அனைத்து மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் கூட்டுறவு அமைச்சகத்தையும் அதன் புதிய கொள்கை உரு வாக்கத்தையும் துவக்க நிலையிலேயே  நிராகரிக்க வேண்டும்.

;