பிரதமர் நரேந்திர மோடி தேர்தலையொட்டி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்கிறார். ஆனால் ஒவ்வொரு வருகையின்போதும், வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறாரே தவிர தமிழ்நாட்டிற்கு உருப்படியான எந்த ஒரு திட்டத்தையும் அவர் அறிவிப்பதில்லை.திங்க ளன்று தமிழ்நாட்டிற்கு வருகை தரும் அவர் கல்பாக்கம் ஈனுலை திட்டத்தை மேற் பார்வையிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையையொட்டி மீனவர்கள் கட லுக்குச் செல்ல தடை, போக்குவரத்து மாற்றத் தால் ஏற்படுகிற நெருக்கடி என்பதைத் தவிர தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பலனுமில்லை.
தலைநகர் சென்னை மற்றும் வட மாவட்டங்க ளிலும் ஏற்பட்ட புயல், வெள்ளம், அதைத் தொ டர்ந்து தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் தமிழக மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். ஆனால் தமிழ்நாட்டிற்கு உரிய நிவாரண நிதி வழங்க ஒன்றிய அரசு மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் மறுக்கிறது.
அண்மையில் தமிழகத்திற்கு வந்த ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் நிவாரண நிதி ஒதுக்குவதற்கென்று சில நடைமுறைகள் உள்ளன; அது முடிந்தவுடன் நிதி ஒதுக்கப்படும் என்கிறார். ஆனால் இந்த நடைமுறைகள் எப்போது முடியும் என்று அவர் எதுவும் கூற வில்லை. தேர்தல் நடைமுறை துவங்கிவிட்டால் அதைக் காரணம் காட்டி நிதி எதுவும் ஒதுக்கா மல் இருப்பது தான் அவர்களது திட்டமாக இருக்கிறது.
மறுபுறத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் துவக்கப்படவேயில்லை. இதற்கு ஒன்றிய அரசிடமிருந்து எந்த உத்தரவா தமும் அளிக்கப்படவில்லை. இடையில் பாஜக தலைவர் அண்ணாமலை, எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள மரங்க ளை அகற்றித்தர வேண்டுமென்று புதுக் கரடி விடுகிறார்.
இந்தக் காரணம் குழந்தைத்தனமானது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மறுத்துள்ளார். ஒற்றைச் செங்க லோடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிற்பதற்கு மரம் வெட்டாததுதான் காரணமா, என்றால் இல்லை. மாறாக, ஒன்றிய அரசு நேரடியாக நிதி ஒதுக்குவதற்குப் பதிலாக ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்துடன் கடன் பெற்று கட்டிடங்கள் கட்டப்படும் என்றனர். அதற்கான நடைமுறை கள் இழுத்தடிக்கப்பட்டதுதான் தாமதத்திற்கு காரணம்.
ஏனைய மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஒன்றிய அரசு நிதியி லேயே நேரடியாக கட்டப்பட்டன. தமிழ்நாட்டி ற்கு மட்டும் இந்த சிக்கலை உருவாக்கியது மோடி அரசுதான். தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அடிக்கடி வந்தாலும் அவரால் எந்த நன்மையும் வந்து சேரவில்லை என்பதுதான் உண்மை.