இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்திலி ருக்கிறது என்றும் அதற்கு நரேந்திர மோடியின் பாஜக அரசுதான் காரணம் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி லண்டனில் குற்றம் சாட்டியிருந்தார். அதையடுத்து பாஜக செய்தி தொடர்பாளர் பூனவாலா ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்திதான் எமர்ஜென்சியை அறிவித்தார் என்றும் ராகுல் ஜனநாயகத்தை போதிக்கிறார் என்றும் கிண்டல் செய்யப்பட்டது.
தற்போது மீண்டும் ஒன்றிய தகவல் ஒளி பரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளி நாடுகளுக்கு சென்று தேவையில்லாமல் பேசி இந்தியாவுக்கு துரோகம் இழைக்கும் செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அத்துடன் இந்தியாவை காட்டிக் கொடுக்காதீர்கள் என்றும் வசைபாடியுள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது அன்றைய பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு ஆதர வாக இருந்து நாட்டை காட்டிக் கொடுத்தவர்கள் இன்றைய பாஜகவின் முன்னோடிகளான தலை வர்கள்தான். இந்நிலையில் அனுராக் தாக்கூர் வெளிநாட்டில் காட்டிக் கொடுப்பதாக கூறுவது அபத்தமானது. மற்றவர் யாரும் காட்டிக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. இவர்களது ஆட்சியின் நடவடிக்கைகளே அதனை காட்டிக் கொடுத்துவிடும். அதற்கு உதாரணம் அண் மையில் பிபிசி நிறுவனத்தின் மீது தொடுக்கப் பட்ட தாக்குதல்.
இந்திராகாந்தி காலத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதும், ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதும் பின்னர் அதற்காக நாட்டு மக்க ளிடம் அவர் மன்னிப்பு கேட்டதும் பழைய வர லாறு. ஆனால் இன்றைய பிரதமர் மோடியோ இந்த ஒன்பதாண்டு காலத்தில் ஜனநாயக அமைப்புகள் மீதும் அரசியல் சாசன அமைப்புகள் மீதும் நடத்தும் தாக்குதல்கள் அறிவிக்கப்படாத அவசர நிலைக் காலமாக உள்ளது.
இவரது ஆட்சிக்கு எதிராக கருத்து கூறும் ஊட கங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மீது தேசத் துரோக வழக்கு கள் மற்றும் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகள் மற்றும் கைது, சிறை போன்ற தாக்குதல்கள்தான் இவர்களது ஜனநாயக நடவடிக்கைகளோ? இந்திய ஜனநாயகம் வலு வாக உள்ளது. இந்திய தலைமை (பிரதமர் நரேந்திர மோடி) வலிமையாக உள்ளது என்றும் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.
இப்படித்தான் ஜெர்மனியில் ஹிட்லர் உலகின் மிக வலிமையான தலைவர் என்று கூறிக்கொண்டு பிற நாடுகளின் மீது போர் தொடுத்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். தன்னை ஒரு சர் வாதிகாரியாக காட்டிக் கொண்ட அவர் தோல்வி பள்ளத்தாக்கில் விழுந்தபின்னர் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். அத்தகைய ஜனநாயக விரோத பாசிச பாணியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பாஜக ஆட்சி ஜனநாய கத்தைப் பற்றி பேசுவது கேலிக்கூத்தாகவே உள்ளது. எதிர்க்கட்சிகளின் ஆட்சியை ஆளு நர்கள் மூலம் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கூட்டாட்சி தன்மையையே குலைப்பது தான் வலிமையான ஜனநாயகமோ? இத்தகைய ‘ஜனநாயகம்’ நீடிக்க நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.