headlines

img

பின்வாங்கிய மோடி அரசு எனினும் எச்சரிக்கை தேவை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்ப டையில் பட்டியலின மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் கட்டமைப்புகள், அடிப் படை வசதிகளை அதிகரிக்க எம்.பி.க்களுக்கான தொகுதி நிதியிலிருந்து 15 சதவீதம், 7.5 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. 

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வரும் ஒன்றிய பாஜக அரசு இந்தத் திட்டத்திலும் புகுந்து தனது திருகுதாள வேலையை காட்டியது. பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளுக்கு நிதி ஒதுக்குவது கட்டாயமல்ல, ஆனால் விரும்பத்தக்கது என அறி வித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இந்தநிலையில், எதிர்ப்பின் வேகம் கண்டு ஒன்றிய அரசு பின்வாங்கியுள்ளது. விரும்பத்தக் கது என்று கூறியதை திரும்பப் பெற்றுள்ளது. இதன்மூலம் எம்.பி.க்கள் தொகுதி  மேம்பாட்டு நிதியிலிருந்து பட்டியலின மக்கள் வாழும் பகுதி களுக்கு 15 சதவீதமும், பழங்குடி மக்கள் வாழும் பகு திக்கு 7.5 சதவீதமும் ஒதுக்கப்படுவது கட்டாயம் என்பது தொடர்கிறது.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஆண்டுக்கு 5 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒதுக்கப்படுகிறது. அதன்படி ஐந்தாண்டுகளுக் கான 25 கோடியில் 3.75 கோடி பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளுக்கும், 1.87 கோடி பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளுக்கும் ஒதுக்கப்படுவது கட்டாய மாக உள்ளது. இதைத்தான் ஒன்றிய அரசு எவ்வித காரணமும் இல்லாமல் மாற்ற முயன்றது.

விரும்பத்தக்கது என்று மட்டும் இருந்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்கு இந்த நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். கட்டாயம் என்று இருக்கும் போதே இந்த விகிதத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.அதையும் எடுத்துவிட் டால் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்கு குறைந்தபட்ச நிதி கிடைப்பது கூட பல தொகுதிகளில் தடுக்கப்பட்டு விடும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிராக வாய்ப்பு  கிடைக்கும் போதெல்லாம் அநீதி இழைக்க முயலும் மோடி அரசிடம் சமூக நீதி சக்திகள் விழிப்போடு இருக்க வேண்டும்.

பசு இறைச்சி அரசியல் என்ற பெயரில் தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கெதிராக வெறுப்பு அரசியல் விசிறி விடப்படுகிறது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தலித் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு குறுக்கு வழிகளில் மறுக்கப்படுகிறது. ஒன்றிய அரசு எல்லா வகையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதி ரான அரசாக உள்ளது. ஆனால் பிரதமரும், ஒன்றிய அமைச்சர்களும் வாயால் முழம் போடு வது மட்டும் முடக்கமில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது. அவர்களது கருத்தியலே சாதியை, தீண்டாமையை அடிப்படையாக கொண்டது. அது அவ்வப்பொழுது வக்கிரமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

;