இந்தியத் துணைக் கண்டம் பல்வேறு மத, மொழி, இன மக்களைக் கொண்ட நாடு. வேற்று மையில் ஒற்றுமை அதன் சிறப்பு. ஆனால் இந்துத்துவா வெறி கொண்ட ஆர்எஸ்எஸ் பரிவாரத்தினரால் மக்களிடையே நல்லிணக்கம் குலைக்கப்பட்டு நாசக்கேடு விளைந்து கொண்டி ருக்கிறது.
கடந்த மாதம் ஹரித்துவாரில் நடந்த சாமியார் கள் மாநாட்டில் கலந்து கொண்டார்கள். நாட்டில் இந்து ராஷ்டிரத்தை நிறுவுவோம், தேவைப் பட்டால் ஆயுதங்களை எடுத்து முஸ்லிம்களைக் கொல்வோம் என்று நஞ்சைக் கக்கினர். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆயினும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. கண்துடைப்பாக ஐந்து பேர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி அரியானா, உத்தரப்பிரதேசம், அசாம் மாநிலங்களில் தேவாலயங்கள் தாக்கப்பட்டன. இயேசுநாதர் சிலை உடைக்கப்பட்டது. தொடர்பு டைய மாநில முதல்வர்களோ, ஒன்றிய உள்துறை அமைச்சரோ, பிரதமரோ கண்டித்து ஒரு வார்த்தை கூட கூறவில்லை. தாக்குதல்கள் தொடர்கின்றன.
இந்த நிலையில் நாட்டின் இரண்டாவது குடி மகனான குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, வெறுப்புப் பேச்சுக்கள் நமது கலாச்சாரம், பாரம்பரியம், அரசியலமைப்புச் சட்ட உரிமைகள் மற்றும் நெறிமுறைகளுக்கு எதிரானவை என்று கேரள மாநிலத்தில் நிகழ்வொன்றில் பேசியிருக் கிறார்.
உண்மைதான், ஆனால் நாட்டில் நடப்ப தென்ன? கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் பாஜக ஆளும் பல மாநிலங்களில் கொண்டு வரப்பட்ட பின்னணியில் பாஜக - பரிவாரங்களின் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்துவிட்டன. கடந்த (2021) ஆண்டின் 9 மாதங்களில் மட்டும் 300 வன்முறைத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.
கர்நாடகத்தில் இந்தச் சட்டம் நிறைவேற்றப் பட்டபின் கிறிஸ்தவ மதபோதகரின் வீட்டுக்குள் நுழைந்து அவரது மனைவி மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றி கோரத் தாண்டவம் நடத்தியி ருக்கின்றனர். இவர்களுக்கு வெங்கய்ய நாயுடு வின் உரை உறைக்குமா? இடத்துக்கும் காலத்துக் கும் தகுந்தாற்போல் பேசுவதற்கு குடியரசு துணைத் தலைவர் ஒரு கட்சியின் தலைவரல்ல. ஆனால் அவரது பேச்சை கேட்பார்களா? பாஜக- ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள்?
ஆயினும் கூட ஆர்எஸ்எஸ்-சின், வசுதேவ குடும்பம்- உலகமே ஒருகுடும்பம் என்பதையே எதிரொலித்திருக்கிறார். இவர்களது குடும்பத்தில் வேறு மதம் இருக்க முடியுமா? ரத்தத்தில் ஊறியது வெளிப்படாமலா போகும்? ஆனால் மதச்சார் பின்மை என்பது ஒவ்வோர் இந்தியனின் ரத்தத்தி லும் உள்ளது என்று அவர் கூறியிருப்பது முற்றிலும் உண்மை.
அதுதான், வெறுப்புச் பேச்சாளர்களை, வன்முறை வெறியாளர்களையும் அவர்களின் அத்துமீறல்களையும் தாங்கிக் கொண்டு இந்தி யாவை நிலை பெறச் செய்திருக்கிறது. அதுவே இந்தியாவின் சிறப்பு. அதைக் காப்பதே ஒவ்வோர் இந்தியரின் கடமை.