headlines

img

இது பிறழ்ச்சி!

‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று வணிக விளம்பரத்தில் வரும் குழந்தையைப் போல பிரத மர் நரேந்திர மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் அடிக்கடி இந்தியா வளர்ச்சியடைகி றது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்  இந்தியாவின் வளர்ச்சி விகிதம் கொரோனா வுக்கு முன்பிருந்த நிலையைக் கூட எட்டவில்லை என்பதை மறந்து விடுகிறார்கள்; நாட்டு மக்களிடம் மறைக்கப் பார்க்கிறார்கள்.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்களை மனதில் கொண்டு ஏற்கெனவே பாஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் கள். அதற்காக பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள். முடிந்தவைகளை திறந்து வைக்கிறார்கள். அதன் ஒரு பகுதியா கவே குஜராத்தில் மாஉமியா - கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழாவிலும் உத்தரப்பிரதே சத்தில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் வளாகத் திறப்பு விழாவிலும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டிருக்கிறார்.

பாரம்பரியத்துடன் இந்தியா வளர்ச்சியடை கிறது என்று பெருமை பீற்றியிருக்கிறார் பிரதமர் மோடி. நாட்டின் சனாதன தர்மத்தையே புதிய வளாகம் வெளிப்படுத்துகிறது என்றும் கூறியிருக் கிறார். அந்த சனாதன தர்மம்தான் - வருணாச் சிரம தர்மம்தான்- கோவில் கட்டுமானப் பணிக ளில் ஈடுபடுபவர்களை பின்னால் உள்ளே நுழை வதை அனுமதிக்க மறுக்கிறது. ஆனால் இப்போது பிரதமர் மோடி கோவில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டவர்கள் மீது 10 நிமிடங்கள் பூத்தூவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு.

ஏற்கனவே உ.பி. மாநில பாஜக தலைவர் தலித் மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களிடம் தேநீர் அருந்த வேண்டும். நமக்கு அவர்கள் தேநீரு டன் முந்திரியும் கொடுத்தால் நமது கட்சிக்காரர் கள் ஆகிவிடுவார்கள். அதற்காக 20 முறையா வது செல்ல வேண்டும் என்று கூறியிருந்தது கவ னத்தில் கொள்ளத்தக்கது.

முகலாய மன்னர் ஔரங்கசீப், முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர் சலார் மசூத், ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் வாரன்ஹேஸ்டிங்ஸ் ஆகியோ ரெல்லாம் கொடுமை செய்தனர் என்றும் அவர்கள் எல்லாம் துரத்தியடிக்கப்பட்டனர் என்றும் கூறி முஸ்லீம், கிறிஸ்தவ வெறிமூலம் மதரீதியிலான அணி திரட்டலுக்கு அடி போடுகிறார்.

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்சாலைகள் நாட்டின் ஆலயங்கள் என்றார். நாடு தொழில் துறை வளர்ச்சியில் முன்னேறத் தொடங்கியது. ஆனால் இப்போதைய பிரதமர் மோடியோ பொது தொழில் துறைகளை எல்லாம் தங்களின் கார்ப்ப ரேட் நண்பர்களுக்கு கைமாற்றிவிட்டு ஆலயங்க ளுக்கு தாராளமாய்ச் செலவழிக்கிறார்; அதுவே வளர்ச்சி என்றும் கதையளக்கிறார்.

காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சி யில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் - என்ற பாரதியின் பாடலை மேற்கோள் காட்டிப் பேசியி ருக்கிறார். அவர் விஞ்ஞானரீதியான முற்போக்கை, வளர்ச்சியை கனவு கண்டார். இவரோ பின்னோக் கிச் செல்ல அதைக் கூறுகிறார். இது வளர்ச்சி யல்ல பிறழ்ச்சி!

;