“தில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்” என்று தெலுங் கானா முதல்வரின் மகளும் பாரத் ராஷ்டிரிய சமிதி யின் (பிஆர்எஸ்) தலைவருமான கவிதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அறி முகப்படுத்த வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக கவிதா தலைமையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் தில்லி ஜந்தர்மந்தரில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாரத் ராஷ்டிரிய சமிதி சிவசேனாவை போல் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தது. தமிழகத்தில் அண்ணாமலைபோல் தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்கப்போகிறோம் என்ற பெயரில் அம்மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்கள் ஆட்டம் போடுகிறார்கள். இதனால் சந்திர சேகர ராவின் பிஆர்எஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் உரசல் ஏற்பட்ட நிலையில் அமலாக்கத்துறையை வைத்து ஒன்றிய அரசு தொடர்ந்து மிரட்டி வருகிறது.
தில்லி மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் கைது மத்திய புல னாய்வு அமைப்புகளின் செயல்பாடுகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சம்மன்களுக்கு முறையாக ஆஜரான பின்னரும் சிசோடியா கைது செய்யப்பட்டார். அவர்மீது என்ன குற்றம் சாட்டுகிறீர்கள் என நீதிபதியே கேள்வி எழுப்பி னார். சிசோடியா வழக்கில் பணம் பறிமுதல் போன்ற குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக சிசோடியா குறிவைக்கப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக கவிதா, லாலு பிரசாத், ரப்ரிதேவி போன்றோர் குறிவைக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளபோதிலும் எந்த ஒரு பா.ஜ.க. தலைவருக்கு எதிராகவும் நடவடிக்கை இல்லை.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினால் அமலாக்கத்துறையை வைத்துப் பொய் வழக்கு போட்டு கைது செய்வது வாடிக்கையாகி விட்டது. ஜனநாயகத்தின் மீது பிரதமர் மோடிக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள் ளது. ஆண்டுக்கு 2 கோடிப்பேருக்கு வேலை என்ற வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றவில்லை. 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்த லில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டால் நமது பாடு திண்டாட்டம் என்பதை பாஜக தலைவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பர். எனவே தான் எந்த அளவுக்கு மிரட்டமுடியுமோ அந்த அளவுக்கு மத்திய விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுகிறார்கள். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, சட்டத்தையோ ஜனநாயகத்தையோ மதிப்பது இல்லை என்பது இதன்மூலம் வெளிப் படையாகவே தெரிகிறது.