மகாராஷ்டிரா மாநிலத்தில் குதிரை பேரம் மூலம் ஆட்சியை அபகரித்த பாஜக தன்னுடைய பார்வையை தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தை நோக்கி திருப்பியுள்ளது. “ஆப்பரேசன் தாமரை” என்ற பெயரில் ஆட்சிக் கவிழ்ப்பதையே ஒரு அர சியல் சாதுர்யம் போல பாஜக செய்து வருகிறது. இது ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் செயலாகும்.
ஜார்க்கண்ட் அரசை கவிழ்க்கும் நோக்கத்துடன் எம்எல்ஏக்களை பாஜக விலைபேசி வாங்கி வருகிறது. பாஜக ஆட்சி அமைக்க ஆதரவளிக் கும் எம்எல்ஏக்களுக்கு ரூ.10 கோடி லஞ்சமும் அமைச்சர் பதவியும் அளிக்கப்படும் என ஆசை காட்டி வருவதாக ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏ குமார் ஜெய்மங்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
பாஜகவிடம் பணம் பெற்ற ஜார்க்கண்ட் மாநி லத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மூன்று பேர் மேற்கு வங்கத்தில் பிடிபட்டுள்ளனர். இவர்கள் அந்தக் கட்சி யிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள ஆட்சியை கவிழ்ப்பதற்கு எம்எல்ஏக்களுக்கு கட்டுக்கட்டாக லஞ்சப் பணம் தரப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் நடந்த வாகன சோதனையில் அவர்கள் பிடிபட்டுள்ளனர்.
ஆனால் இது பொய்ப்புகார் என்று பாஜக வழக்கம்போல மறுத்துள்ளது. ஆனால் கோவா, கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக இதேவேலையைத்தான் செய்தது என்பதை நாடு நன்கறியும்.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பணம் கொடுத்து எம்எல்ஏக்களை வலைவீசிப் பிடிப்பது மட்டுமல்ல, அந்த மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்க்க மத்திய புலனாய்வு அமைப்புகளையும், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளையும் பாஜக கூச்சநாச்சமின்றி பயன்படுத்தி வருகிறது.
இவ்வாறு ஆட்சியைப் பிடித்துவிட்டு தங்கள் கட்சியின் செல்வாக்கு ஒவ்வொரு மாநிலமாக பரவி வருகிறது என்று பாஜகவினர் பீற்றிக் கொள்வது அவக்கேடானது. கடந்த ஆட்சியின் போது புதுவையில் சில எம்எல்ஏக்களை இதே போன்று பாஜக வளைத்தது. தற்போது தேர்தலுக் குப் பின்பு நியமன எம்எல்ஏக்கள் மூலம் தன்னு டைய பலத்தை பாஜக பெருக்கிக் கொண்டுள்ளது. இதன் மூலம் புதுவையிலும் பாஜக விரும்புகிற நேரத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்தை அரங் கேற்ற தயங்கமாட்டார்கள்.
பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவீசி ஒன்றிய ஆட்சி அதிகாரத்தை பிடித்தவர்கள் தற்போது பல மாநிலங்களில் முறைகேடான வழி யில் ஆட்சியைப் பிடிக்கின்றனர். ஒரு காலத்தில் வித்தியாசமான கட்சி என்று பாஜக தன்னை கூறிக் கொள்வதுண்டு. குதிரைபேரம், ஆள்பிடிப்பு, ஆட்சிக்கவிழ்ப்பு போன்றவற்றில்தான் பாஜக வித்தியாசமான கட்சியாகத் திகழ்கிறது. ஜன நாயகத்தின் அடிவேரை அரித்து தின்னும் கறை யான்களாகவே ஆர்எஸ்எஸ் பரிவாரம் மாறி யுள்ளது.