headlines

img

கைப்பற்றலைக் கைவிடுக!

ஒன்றிய அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது 2014இல் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு அதிகாரப் பசியோடு தீவிரமாகிவிட்டது. அதற்கு பாஜகவின் எஜ மான அமைப்பான ஆர்எஸ்எஸ்-சின் பாசிச பாணி சர்வாதிகாரக் கொள்கையே காரணம். இந்துத் துவா ஒற்றையாட்சியை நோக்கிய நகர்வில் ஒரே நாடு, ஒரே வரி- ஜிஎஸ்டி உள்ளிட்ட கொள்கை யால் மாநிலங்கள் ஒன்றிய அரசிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வரவெல்லா வற்றையும் கொடுத்துவிட்டு தங்களின் பங்குக்காக ஒன்றிய அரசின் ‘கனிவான’ பார்வைக் காக அவை காத்துக் கிடக்கின்றன.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட்,மே.வங்கம் போன்ற மாநிலங்கள் மிக மோசமாகப் பழி வாங்கப்படு கின்றன. இந்நிலையில், மாநிலங்களின் பொரு ளாதார நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கும் கூட்டுறவுத் துறையையும் கைப்பற்று வதற்காக ஒன்றிய கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டு அதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவே பொறுப்பாக்கவும் பட்டார்.

இப்போது அவர் குஜராத் மாநிலத்தில் அம்ரேலி மாவட்ட கூட்டுறவு அமைப்புகளின் வருடாந்திரக் கூட்டத்தில் பேசும்போது, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அளித்து அவற்றை பல்நோக்கு கொண்டதாக மாற்ற துணை விதிகள் தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

விவசாயிகளின் நலனில் அக்கறையிருந்தால் அவர்களுக்கு வட்டியில்லா அல்லது குறைந்த வட்டி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கலாம். அவர்களின் விளைபொருட்களை கொள்முதல் செய்து ஆதாரவிலை வழங்கலாம். ஆனால் இவர், விவசாயிகளின் நலனைக் காக்கும் நோக்கில் வேளாண் விளை பொருட்களை உலகச் சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில் பல மாநில கூட்டுறவு ஏற்றுமதி மையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.

உலகச் சந்தையில் யார் விற்பார்கள்? இவர்க ளது கார்ப்பரேட் முதலாளி நண்பர்கள் தானே செய்வார்கள்?

நாட்டின் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங் கள் லாபம் சம்பாதிப்பதாக மாற்றப்படும் என்றும் கூறியிருக்கிறார். எப்படி? பணமதிப்பிழப்பு காலத்தில் இவரது மகன் ஜெய்ஷா, செல்லாத நோட்டுக்களைக் கோடிக்கணக்கில் கூட்டுறவு வங்கியில் மாற்றியதைப் போல லாபமீட்டச் செய்வாரோ?

கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு பயன் பட்டு முன்மாதிரியாகத் திகழும் கூட்டுறவு அமைப்புகளை கபளீகரம் செய்யாமல் மாநிலங்க ளின் பொறுப்பிலேயே தொடர அனுமதிப்பதே விவசாயிகளுக்கு செய்யும் நன்மையாகும். இதை ஒன்றிய அரசு செய்திட வேண்டும். கூட்டுறவு அமைப்புகளை கைப்பற்றும் எண்ணத்தை கைவிட வேண்டும்.

;