தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என்று பாஜக பல்வேறு மாரீச வேடங்க ளைப் போட்டு வருகிறது. அதனால் தமிழ்மொழி மீது பற்றும் பாசமும் பொங்கி வழியவிடுகிறது. தருண் விஜய் என்பவர் திருக்குறள் போட்டி, திரு வள்ளுவர் சிலை என்று கூறி கங்கைக் கரையில் வள்ளுவரை மூட்டை கட்டி வைத்துவிட்டார். பிரதமர் மோடியோ ஐ.நா. சபை முதல் பல்வேறு இடங்களில் தமிழைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டுக்கும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு துரும்பளவு கூட செய்வதில்லை.
காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் தமிழகத்தி லிருந்து ஆர்எஸ்எஸ் -பாஜக அதன் பரிவாரங்களு டன் தொடர்புடையவர்களை அழைத்துச் சென்று முதல் கட்ட நாடகம் 2022 நவம்பர் 17- டிசம்பர் 16இல் நடத்தி முடிக்கப்பட்டது. இப்போது சௌராஷ்டிர தமிழ்ச் சங்கமம் என இரண்டாம் கட்டம் ஏப்ரல் 17இல் துவங்கியுள்ளது. இதன் துவக்க விழாவில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் அடையாளத்தை பராமரிப்பதில் கலாச்சாரப் பாதுகாப்பும் முக்கியமானதாக விளங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார். எல்லை, பொருளாதாரம், சமூகம், உணவு, விண்வெளி, இணையம் என அனைத்திலும் பாதுகாப்பாக இருப்பதாக பெருமை பேசி விட்டு கலாச்சா ரத்தை பாதுகாக்க வேண்டுமென கவலைப்பட்டி ருக்கிறார்.
முஸ்லிம்கள், யூதர்கள், பாரசீகர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்கள் இந்நாட்டில் வசிக்கும் வாய்ப்பைப் பெற்றதுடன் அதன் ஒருங்கிணைந்த பகுதியாகவும் மாறியது இந்தியாவுக்கு பெருமை யளிக்கும் விஷயமாகும் என்று கூறிவிட்டு முஸ்லிம் படையெடுப்பாளர்கள் என்ற தங்களின் வழக்கமான பல்லவியைப் பாடியிருக்கிறார்.ஆனால் பல்வேறு தேசிய, இன, மொழி, மத, கலாச் சாரங்களைக் கொண்ட பன்மைத்துவ துணைக் கண்டம் என்பதுதான் இந்தியாவின் சிறப்பு. அதைக் குலைக்கவே பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம்.. என்று பேசிக் கொண்டிருக்கிறது. அதற்காகவே இந்தியா இந்து நாடு என்ற தோற்றத்தை ஏற்படுத்த பல்வேறு திருத்தல் வேலைகளில் ஈடுபடுகிறது.
விவசாயிகள், தொழிலாளர்கள், தேசத்தின் சேவையில் ஈடுபட்டுள்ளோர் ஆகியோரிடமும் 12 ஜோதிர்லிங்கத் தலங்கள், 52 சக்தி பீடங்கள், நான்கு கோவில்கள் (சார்தாம்) ஆகியவற்றிலும் இந்தியாவைக் காண முடியும் என்று கூறுகிறார் ராஜ்நாத். ஆனால் இந்தியா என்றால் உலக அளவில் தாஜ்மகால், பொற்கோவில் சாரநாத் தூண், புத்தகயா, தஞ்சை பெரிய கோவில், எல் லாம் தான் அடையாளமாகத் திகழ்கிறது.
இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், புத்தம், சமணம், பழங்குடி மதங்கள் உள்பட பல வும் இந்தியாவின் அடையாளமே. இவை யனைத்தையும் பாதுகாப்பது தான் நமது கடமை. ஆனால் இதை இந்து நாடாக மாற்றத் துடிக்கும் இந்துத்துவ மதவெறிக் கூட்டம், இப்போது கலாச் சாரத்தைப் பாதுகாக்கப் போவதாக கூறுவது பாசிச பாணி பசப்பலன்றி வேறல்ல. இவர்கள் கை வைக்காமல் இருந்தாலே கலாச்சாரம் பாது காப்பாக இருக்கும். அதற்கு பாஜக ஆட்சி அகற்றப்படுவது அவசியம்.