பச்சோந்திகளின் பசுஞ்சோலையாக மாறி விட்டது பாஜக. ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்பவர்கள் போல பசப்பினா லும் ஊழல் பேர்வழிகள் அந்தக் கட்சியில் சேர்ந் தாலோ அல்லது கூட்டணி வைத்துக் கொண்டா லோ அவர்கள் புனிதர்களாக மாறி விடும் ரச வித்தையை மோடி ஆட்சி செய்து வருகிறது.
மகாராஷ்டிர அரசியலில் அருவெறுப்பான திருப்பமாக தேசியவாத காங்கிரசை உடைத்து ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவளித்த அஜித் பவாருக்கு உடனடியாக துணை முதல்வர் பதவி தரப்பட்டதோடு அவரோடு சேர்ந்து தாவி வந்த சட்டமன்ற உறுப்பினர்களில் எட்டு பேருக்கு அமைச்சர் பதவி அருளப்பட்டுள்ளது.
சிவசேனைக் கட்சியை உடைத்து கட்சித் தாவிய ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பாஜக வினரால் மாற்றப்பட்டார். பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்நாவிஸ் துணை முதல்வராக உள்ள நிலையில், இன்னுமொரு துணை முதல் வராக அஜித் பவார் அறிவிக்கப்பட்டுள்ளார். இது மூன்று என்ஜின் ஆட்சி என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெட்கமில்லாமல் கூறிக் கொள்கிறார்.
அஜித்பவார் மீது கூட்டுறவு வங்கி மோசடி, விதர்பா பாசன மேம்பாட்டுத்திட்ட முறைகேடு, சர்க்கரை ஆலை முறைகேடு உள்ளிட்ட வழக்கு கள் நிலுவையில் உள்ளன. அவரது வீட்டிலும் அவரது உறவினர்கள் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்த வழக்குகளி லிருந்து தப்பிக்கவே கட்சியை உடைத்து ஆளும் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் அஜித் பவார்.
2019ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு இது வரை மூன்று முறை அஜித்பவார் பதவியேற்றுள் ளார் என்பதிலிருந்தே இவரது மின்னல் வேகத்தை புரிந்து கொள்ள முடியும்.
தேர்தல் முடிந்தவுடன் தேசியவாத காங்கிரசி லிருந்து விலகி பாஜக கூட்டணிக்கு ஆதரவளித் தார். அந்த அரசு நீடிக்கவில்லை. அதன்பின் தேசியவாத காங்கிரசுக்கு மீண்டும் தாவி சிவ சேனை தலைமையிலான அரசுக்கு ஆதரவ ளித்து பதவியிலும் இருந்தார். சிவசேனையை உடைத்து ஷிண்டே முதல்வரான நிலையில் இவர் மீண்டும் தேசியவாத காங்கிரசை உடைத்து சந்தர்ப்ப வாத கூட்டணியில் சங்கமமாகி உள்ளார்.
ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அமலாக்கத்துறை காட்டிக் கொள்வது எந்தள வுக்கு மோசடியானது என்பதை மகாராஷ்டிர அரசியல் நிகழ்வுகளிலிருந்து புரிந்து கொள்ள முடியும். அரசியல் அறமற்ற இத்தகைய நட வடிக்கைகளுக்கு ‘ஆப்ரேசன் லோட்டஸ்’ என்று பாஜக பெயர் சூட்டுகிறது. இவர்களது ஆப்ரேசன் அனைத்தும் ஜனநாயகத்தை குத்தி கொலை செய்வதாகவே உள்ளது. பாஜக எந்த எல்லைக் கும் செல்லும் விவஸ்தையற்ற கட்சி என்ப தற்கு இது மேலும் ஒரு சாட்சி.