ஞாயிறு, நவம்பர் 29, 2020

headlines

img

பீகார் சட்டமன்ற தேர்தல் : பிரிவினையில் முன்னிலை....

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. பிரித்தாளும் சூழ்ச்சியில் கைதேர்ந்த பாஜக தற்போது வாக்குகளை பிரித்துமீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைதக்க வைத்திருக்கிறது. 

கடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில்  ராஷ்டிரியஜனதாதளம்  87 ஆயிரம் வாக்குகள் பெற்றால் ஒரு சட்டமன்ற தொகுதியை கைப்பற்ற முடிந்தது.ஆனால் இந்த முறை  அதே தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகள் பெற்றால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. அதே நேரம் பாஜக ஒரு தொகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் பெற்றாலே வெற்றி பெற முடிந்திருக்கிறது. இதற்குள் இருக்கும் சூட்சமமே பாஜக கையாண்ட எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கும் சூழ்ச்சி அரசியல்தான். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 53 சதவிகிதவாக்குகளை பெற்றிருந்த மோடி - நிதீஷ் கூட்டணிஇந்த  சட்டமன்ற தேர்தலில் 51 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது. ஆனாலும் ஆட்சியை தக்கவைத்திருக்கின்றனர்.

 8 முதல் 951வாக்குகள்  8 தொகுதிகளின் வெற்றி தோல்வியைநிர்ணயம் செய்திருக்கிறது.  பீகார் தேர்தல் முடிவுகளில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும்கற்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கிறன. இதனை ஏளனம் செய்தால் அது மதவெறி கூட்டத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாகவே அமையும். விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை இடதுசாரிக் கட்சிகள் வலுவாக வலியுறுத்தி வருகின்றன. அதன் தேவையை பீகார் சட்டமன்றத்தேர்தல் முடிவுகளும் அழுத்தமாக உணர்த்தியுள்ளன.பீகார் தேர்தல் களத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும் சந்தேகத்திற்குரியதாகவே அமைந்துள்ளது. பாஜகவுக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கும் இடையே இழுபறி இருந்த தொகுதிகளில் தேர்தல் முடிவைஅறிவிப்பதில் தேர்தல் ஆணையம் செய்த தாமதம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த ஐக்கிய ஜனதாதளம் பெரும்பாலான இடங்களை இழந்துள்ளது.

அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க முயலும் கட்சிகளுக்கு இது ஒரு பாடமாகும்.இந்திய ஜனநாயகத்தை சூழ்ந்து நிற்கும்ஆபத்தை உணர்ந்து மதவெறி பிரிவினைவாதத்திற்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள்வதே பாஜகவை முறியடிக்க உதவும். மதவெறிக்கு மாற்றாக‘மாற்று மதவெறி அரசியல்’ ஒரு போதும் தீர்வாகாது. அது மதவெறி பிரிவினையை மேலும் ஊக்குவிக்கவே செய்யும். அதைத்தான் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளும் விரும்புகின்றன.அதே நேரத்தில் மதவெறி அரசியலுக்கு எதிராகவும், இந்திய ஜனநாயகத்தை பாதுகாப்பதில்முன்வரிசையில் நிற்கும் இடதுசாரிகளை பீகார்மக்கள் கணிசமாக தேர்ந்தெடுத்திருக்கின்றனர். மகாகத்பந்தன் கூட்டணியில்  இடதுசாரிகள் போட்டியிட்ட இடங்களில்  55 சதவிகித வாக்குகளை  மக்கள் வழங்கியிருக்கின்றனர். 

கூட்டணியில் போட்டியிட்ட இடங்களில்அதிகமான வாக்குகளை பெற்ற கட்சியாக இடதுசாரிகளை பீகார் மக்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம். பீகார் சட்டமன்றத்தில் 16 இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர்கள் நிச்சயமாக பாஜககூட்டணிக்கு சிம்ம சொப்பனமாகவே இருப்பார்கள்.
 

;