headlines

img

கருப்புப் பணமும், கருப்புப் பக்கங்களும்

தமிழகத்தில் தேர்தல் பரப்புரை உச்சக்கட்டத் தில் இருந்த நிலையில் ஏப். 6ஆம்தேதி நெல்லை விரைவு ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. விசார ணையில் இந்தப் பணம் திருநெல்வேலி தொகு தியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நயி னார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக சதீஷ், பெருமாள், நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

ஆனால்  முழுப் பூசணிக்காயை சோற்றில் கூட அல்ல, காற்றிலேயே மறைக்கும் வகையில் இந்தப் பணத்திற்கும், எனக்கும் சம்பந்தமில்லை என்றார் நயினார் நாகேந்திரன். ஆனால் நயி னார் நாகேந்திரனின் உறவினர் முருகனிடம் நடத்திய விசாரணையில் பணம் கொண்டு செல்ல உதவியாக இருவரை அனுப்பியதாக ஒப்புக் கொண்டார். 

முருகன் தன்னுடைய உறவினர்தான் என்பதை மறுக்க முடியாத நயினார் நாகேந்தி ரன் தொடர்ந்து மழுப்பி வந்தார். சட்டவிரோத மாக பணம் கொண்டு சென்றவர்கள் நயினார் நாகேந்திரனின் சிபாரிசில் இ-கியூ போட்டுத் தான் சென்றுள்ளனர் என்பதும் தெரியவந்தது.

சம்பந்தமில்லாத வழக்குகளில் மூக்கை நுழைக்கும் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை, இந்த வழக்கை விசாரிக்க முடியாது என நீதி மன்றத்திலேயே கூறி நழுவிக் கொண்டது. இது வரை நடத்தப்பட்ட விசாரணையில் நயினார் நாகேந்திரனுக்காகவே இந்தப் பணம் கொண்டு செல்லப்பட்டது உறுதியாகிறது. ஆனால் உத்த மர் வேடம் போடும் பாஜக இதுகுறித்து வாய் திறக்க மறுக்கிறது.

இது தொடர்பாக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப் பட்டது. இருவரும் வெளி மாநில பிரச்சாரத்தில்ஈடு பட்டிருப்பதாக கூறி ஆஜராக அவகாசம் கோரினர்.  எனினும் எஸ்.ஆர்.சேகர் ஆஜராகியுள்ளார்.

இந்த தேர்தலில் பாஜக சார்பில் பெருமளவு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. பல இடங்களில் பணத்தை பிரித்துக் கொள்வதில் பாஜகவினரிடையே அடிதடி நடந்துள்ளது. தங்க ளுக்கு பணம் வரவில்லை என்று பாஜகவினரே போஸ்டர் ஒட்டும் அளவிற்கு நிலைமை சென்றுள்ளது. 

ஆனால் மறுபுறத்தில் பாஜகவினர் உத்தமர் வேடம் போடுகின்றனர். மடியில் கனமில்லை என் றால், நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஒத்துழைத்து தன்னை குற்றமற்றவர் என நிரூ பிக்க வேண்டியது தானே? கருப்புப் பணத்தை வைத்து பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது பாஜக. கருப்புப் பணத்தை இவர்கள் ஒழித்த லட்ச ணம் இதுதான். இந்த விசயத்தில் தேர்தல் ஆணை யம் நடந்து கொள்ளும் விதமும் நேர்மையான தாக இல்லை.

;