நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கொலிஜி யம் செய்யும் பரிந்துரைகளை முன்பு பலமுறை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருந்தது கண்டனத்திற்குள்ளாயிருக்கிறது. பின்னர் மீண்டும் கொலிஜியம், ஆட்சியா ளர்களுக்கு ஏற்ற முறையில் மாற்றுப் பரிந்துரை வழங்க நிர்ப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.
அதற்கு ஏற்றாற்போல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் மாறுதலுக்குள்ளாயிருக்கின்றனர். ஒன்றிய சட்ட அமைச்சகம் விதிமுறைகளையும் நெறி முறைகளையும் மீறுவதை தொடர்ந்து செய்தி ருக்கிறது.
மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அகில் குரேஷி கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டதை ஏற்காமல் பாஜக அரசு இழுத்தடித்தது. பலத்த எதிர்ப்புக்குள்ளானது. தொடர்ந்து குரேஷியை மும்பை உயர்நீதி மன்றத்துக்கு இடமாறுதல் செய்தது. அதற்கும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து திரிபுரா மாநில நீதி மன்றத்துக்கு மாற்றியது. ஐந்து நீதிபதிகள் கொண்ட மாநிலத்துக்கு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டது பழிவாங்கும் செயலே என்றும் கண்டனம் எழுந்தது. கடைசி வரை அவர் உச்சநீதிமன்ற நீதிபதி ஆகாமலேயே ஓய்வுபெற்றது. நீதித்துறைக்கு களங்கமாக அமைந்தது.
தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை பழிவாங்க மேகாலயா மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யும் புதுவழியை பாஜக அரசு பயன்படுத்துகிறது. இந்த வழி நீதித்துறைக்கு மேன்மை தராது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி யாக இருந்த தகில்ரமாணி மேகாலயா நீதிமன்றத்து க்கு மாற்றப்பட்டு பழிவாங்கப்பட்டார். 75 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை 3 நீதிபதிகள் கொண்ட மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்வது அவரை அவமானப்படுத்தும் செய லாகும்.
இதற்கு தமிழ்நாட்டு நீதித்துறை வட்டாரத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தும் கூட ஒன்றிய பாஜக அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இந்நிலையில் நீதிபதி தகில்ரமாணி தனது பதவியை ராஜினாமா செய்து தன்னுடைய எதிர்ப்பைக் காட்டினார் என்பதே பாஜக அரசுக்கு பதிலடியாக அமைந்தது.
தற்போது அதே பாணியில் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் சஞ்சீப் பானர்ஜியை அதே மேகாலயா மாநில நீதிமன்றத் துக்கு மாற்றியிருப்பது கடும் சர்ச்சையையும் எதிர்ப்பை யும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு வழக்க றிஞர்கள் கடும் எதிர்ப்பையும் தெரிவித்து போராட் டம் நடத்தினர். இந்த இடமாறுதல் பரிந்துரையை கைவிட வேண்டுமென வலியுறுத்தினர். ஆயினும் ஒன்றிய அரசு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலை பெறுவதில் தீவிரம் காட்டி கையெழுத்தையும் பெற்றுவிட்டது.
நீதித்துறை நியமனங்கள், இடமாறுதல், பதவி உயர்வு ஆகியவை தொடர்பாக தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் அதன் செயல்பாடு வெளிப்படைத் தன்மை யுடன் இருக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகிறது. அது ஒன்றுதான் நீதித்துறையின் செயல் பாடு நேர்மையாகவும் சுயேச்சையாகவும் நடை பெறும் வாய்ப்பை ஏற்படுத்தும்.