ஏற்கனவே எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,200 என்றான நிலையில் நாட்டு மக்களின் வீடு களில் அடுப்புகள் எரிகிறதோ, இல்லையோ மன தெல்லாம் துயரத்தால் புகைந்து கொண்டிருக்கி றது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறி விலை களும் கடுமையாக உயர்ந்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
ஒன்றிய அரசின் விவசாய விரோதக் கொள் கைகளால் அவர்களின் விளை பொருட்க ளுக்கு கட்டுபடியான விலை கிடைக்காமல் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை ஏற் பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நாளைக்கு 7 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது. அங்கு வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் தங்களின் உள்ளக் காயத்தால் உயிரை மாய்த்துக் கொள்வது இன்னும் அதிகரிக்கவே செய்கிறது.
தற்போது தக்காளி விலை தில்லியில் ரூ.200 என்றும், சென்னையில் ரூ.120 என்றும் விற்கிறது. அழுகும் பொருளான தக்காளியை சேமித்து வைப்பது சிரமம் இருக்கலாம். அதற் கெனவே சேமிப்புக் கிடங்குகளை அமைத்துக் கொடுப்பதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்துவதும், நிதி ஒதுக்கி துரித நட வடிக்கை எடுப்பதும் முக்கியம். ஆனால் இவை யெல்லாம் உரிய கவனத்தோடும் காலத்தை உணர்ந்த கணிப்புகளோடும் செய்யப்படாததால் தற்போது விவசாயிகளும் நுகர்வோரான பொது மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.
தமிழக அரசு தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளையும், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்க ளையும் குறைந்த விலையில் வழங்கிட உணவுத் துறை, கூட்டுறவு துறை அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தியிருக்கிறது. இதையடுத்து உழவர் சந்தைகளிலும் 300 கூட்டுறவு நியாயவிலைக் கடைகளிலும் தக்காளி விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
ஆயினும் மழைக்காலத்தையொட்டி வழக்க மாக ஏற்படும் வரத்துக் குறைவினால் நிகழும் பற்றாக்குறையாகவும், விலையேற்றமாகவும் இப்போது இருக்கும் சூழல் இருப்பதாக தெரிய வில்லை. பதுக்கலும், ஒதுக்கலும் இந்த விலை உயர்வுக்கு மேலும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாகவே தோன்றுகிறது. எனவே அவற்றை கண்காணிக்கும் நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்திட வேண்டும்.
ஒன்றிய அரசின் பிரதமராக வாஜ்பாய் இருந்த காலத்தில் ஏற்பட்ட வெங்காய விலை உயர்வு அவரது ஆட்சிக்கு முடிவுரை எழுதுவ தற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தது. தற்போது மோடியின் ஆட்சிக்கு முடிவுரை எழுது வதற்கான காரணங்களில் ஒன்றாக தக்காளி, வெங்காய விலை உயர்வு அமைந்திடும் சூழல் ஏற் பட்டுள்ளது. கார்ப்பரேட் நண்பர்களின் நலனைப் பற்றியே கவலைப்படாமல் நாட்டுமக்கள் நலனைப் பற்றியும் கவலைப்பட்டால் இந்த விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாதது அல்ல.