headlines

img

கூலி வீழ்ச்சி தேசத்தின் வீழ்ச்சி

இந்தியாவில் தொழிலாளர்களின் கூலி  வளர்ச்சி விகிதத்தின் போக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக மோசமான முறையில்  வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. தொழிலாளர்கள்  பெறும் கூலி ஆண்டுக்கு ஆண்டு சுருங்கி வரு கிறது என்பதை இந்தியா ரேட்டிங்ஸ் அமைப்பின் சமீபத்திய ஆய்வு விபரங்கள் தெரிவிக்கின்றன. 

2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்திய தொழி லாளர்களின் வழக்கமான கூலி உயர்வு 5.7  சதவீதம் வீழ்ந்துள்ளது; 2012 - 2016ஆம் நிதி யாண்டு காலக்கட்டத்தில் கூலி வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. மேற்கூறிய விதத்தில் மிகப்பெரும் வீழ்ச்சியை எட்டியுள்ளது. இது நாட்டின் சுமார் 45 சதவீத குடும்பங்களின் வருவாயில் மிகக்கடுமையான தாக்குதலாக மாறியுள்ளது. 

கூலி வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி மட்டுமல்ல,  சமீப ஆண்டுகளாக தொழிலாளர் பெறும் கூலியின் உண்மை மதிப்பு மைனஸ் 1 என்ற  சதவீதம் அளவிற்கு எதிர்மறையாக சுருங்கி யுள்ளது. இதன்பொருள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட கடுமையான தாக்குதலின் விளைவாக தொழிலாளர் பெறும் குறைந்த கூலியை முழுமையாக, கட்டாயமாக செலவிடுவது மட்டுமல்ல; வெளியில் கடன் வாங்கியும் செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அதிகரித்துள்ளது என்பதே. 

இது எதனால் ஏற்பட்ட விளைவு என்பதை  விவாதிக்க வேண்டியது அவசியமாகும். மோடி  அரசு தொழிலாளர் நலன்காக்கும் சட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்து வெறும் 4 தொகுப்புச் சட்டங்களாக சுருக்கியது; அதன் மூலமாக தொழிற்சங்க நடவடிக்கைகளை கடுமையாக ஒடுக்கியுள்ளது; நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் கூலி உயர்வுக்கான பேச்சு வார்த்தைகள் உள்ளிட்ட கூட்டுப் பேர நட வடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  மறுபுறம், பெரும் கார்ப்பரேட்டுகளின் லாபத்தை மிக அதிகபட்சமாக குவிப்பதற்கான ஏற்பாடு களை மோடி அரசு உத்தரவாதம் செய்துள்ளது. 

ஒருபுறம் கூலிவெட்டு, கூலியின் உண்மை மதிப்பு வீழ்ச்சி; மறுபுறம் தொழிலாளர் மீதான பல்வேறு வடிவங்களிலான உழைப்புச் சுரண்டல் மற்றும் பெருமுதலாளிகளின் செல்வக்குவிப்பு - ஆகியவற்றின் நேரடி விளைவாக - பெரு வாரியான உற்பத்திப் பொருட்களின் நுகர்வோரா கவும் உள்ள தொழிலாளர்களின் வாங்கும் சக்தி  வீழ்ச்சி அடைந்துள்ளது. இது பொருளாதார வளர்ச்சியிலும் எதிர்மறையான - கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மோடி அரசு தனது பெரும் பணக்கார கூட்டுக்களவாணிகளுக்கு வரிச்சலுகைகள் அளிப்பதையும், வராக்கடன்கள் என்று கூறி பல லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்வதை யும் நிறுத்திக்கொள்ள வேண்டும்; மாறாக, பொது  முதலீடுகளை அதிகரித்து வேலைவாய்ப்பு களை அதிகரிப்பதன் மூலம் தொழிலாளர் கரங் களில் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இதைத்தவிர இந்த நாடு உடனடி யாக மீள்வதற்கு வேறு வழியே இல்லை.