headlines

img

அனுமதிக்கவே முடியாது

எவ்வித ஈவிரக்கமும் இல்லாமல் பாலஸ் தீன மக்களை மேலும் மேலும் கொன்று குவிக்கும் நோக்கத்துடன் இன்னும் கூடுதலாக இஸ்ரேலு க்கு ஆயுதங்களை அனுப்புவது என்று அமெ ரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது. அதை ஏற்று பைடன் அரசு கூடுதல் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே அமெரிக்கா அனுப் பிய ஆயுதங்கள் தான் பாலஸ்தீன மக்களின் உயிரைக் குடித்து வருகின்றன. அதிகாரப்பூர்வ மான கணக்குகளின்படி 35 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் காசா உள்ளிட்ட பகுதிகளில் இஸ் ரேலின் இடைவிடாத கொடூரத் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகளால் நொறுங்கி சிதல மடைந்துள்ள கட்டிடங்களின் இடிபாடுகளில் எத்தனை ஆயிரம் பேர் புதைந்துக் கிடக்கிறார் கள் என்பது கணக்கிடப்படவில்லை.உயிர் பறிக்கப் பட்டவர்களில் கணிசமானவர்கள் குழந்தைகள். 

இத்தகைய நிலையில்தான் இன்னும் 1 பில்லி யன் டாலர் பெறுமானமுள்ள ஆயுதங்களை அனுப்புகிறது அமெரிக்கா. 

உயிர் பறிக்கும் கொடிய அமெரிக்காவுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்று சொல்லும் அளவிற்கு, இந்தியாவின் மோடி அரசும் செயல்படுகிறது என்பது ஆதாரப்பூர்வ மாக தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சரக்கு ஏற்றுமதி நிறுவனங்கள் என்ற பெயரில் செயல் படும் மிகப் பெரும் தனியார் கார்ப்பரேட் நிறு வனங்கள் மூலம் இஸ்ரேலுக்கு இந்தியாவிலி ருந்து ஆயுதங்கள் அனுப்பப்படுவது, ஸ்பெயின் நாட்டின் துறைமுகத்தில், சென்னையிலிருந்து ஆயுதங்களோடு சென்ற கப்பல் சிக்கியதன் மூலம் தெரிய வந்துள்ளது. 

சென்னையில் செயல்படும் சித்தார்த்தா லாஜிஸ்டிக்ஸ் எனும் நிறுவனம் மூலம் ஆயு தங்கள் கப்பலேற்றி அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிறுவனம் மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்க ளில் செயல்படுகிறது. சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம் ஆயுதங்கள் சப்ளை செய்யும் நிறுவனமாக பதிவு செய்யப் பட்டதாக தெரியவில்லை. சரக்குகள் என்ற பெயரில் சென்னைக்கு ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டு, சரக்குகள் என்ற பெயரிலேயே இஸ்ரே லுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஆயுத உற்பத்தி, ஆயுத ஏற்றுமதி என்பதெல் லாம் அரசு சம்பந்தப்பட்டவை என்று இந்திய மக்கள் எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், பெரும் படுகொலைகளுக்கு துணைபோகும் ஆயுத வியாபாரம் மோடி ஆட்சியில் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றப்பட்டிருப்பது அம்பல மாகியுள்ளது; அதிர்ச்சியளிக்கிறது. இன்னும் குறிப்பாக அமைதியின் உருவமான தமிழ கத்தின் தலைநகரிலிருந்து கொடிய ஆயுதங்கள் அனுப்பப்பட்டிருப்பது பெரும் இழுக்கு; ஆபத்து. தமிழக மக்கள் அனைவரும் உரத்து குரல் எழுப்புவோம்!