headlines

img

செவ்வானத்தில் மேலும் ஒரு நட்சத்திரம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் இடதுசாரியும், சிலி கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியின் வேட்பாளரு மான காப்ரியல் போரிக் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து நின்ற அன்டோ னியோ கஸ்ட்டுக்கும், போரிக்குக்கும் இடையி லான போட்டி என்பதை விட, வலதுசாரிக்கும்  இடதுசாரிக்கும் இடையிலான போட்டியாகவே தேர்தல் களம் அமைந்திருந்தது. 

2015 ஆம் ஆண்டிலிருந்து பல தென் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிகள் பின்னடைவைச் சந்தித்தனர். 

இந்தப் பின்னடைவிற்கு வேகத்தடை போடப் பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், மத்திய அமெரிக்காவில் மெக்சிகோ, ஹோண்டுரஸ், நிகர குவா மற்றும் தென் அமெரிக்காவில் அர்ஜெண்டி னா, பொலிவியா, வெனிசுலா ஆகிய நாடுகள் இடதுபுறம் திரும்பியுள்ளன. தற்போது சிலியில் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றுள்ள கூட்டணி யின் வேட்பாளர் காப்ரியல் போரிக் வெற்றி பெற்று மார்ச் மாதம் ஜனாபதியாகப் பொறுப்பேற்க உள்ளார். 

பிரேசிலில் போல்சனாரோவின் வெற்றி வலது சாரிகளுக்கு ஊக்கமளித்தது. ஆனால், 2022 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லூலா மீண்டும் வெல்வார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பல சமூகத் திட்டங்களுக்கான நிதியை பெரும் பணக்காரர்கள் மீது வரி போடுவதன் மூலம் திரட்டப் போவதாக போரிக் தெரிவித்தி ருக்கிறார். அதில் தயக்கம் இல்லாமல் செயல் பட்டாலே பொலிவியா மற்றும் ஈக்குவடாரில் இடதுசாரி அரசுகள் சாதித்ததை சிலியிலும் சாதித்துவிட முடியும். இதற்கு முன்பு, மிஷேல் பேச்லெட் இரண்டு முறை தொடர்ந்து சிலியின் ஜனாதிபதியாகப் பதவி வகித்தார். இடதுசாரிக் கொள்கைகளை முன்னிறுத்தியே அவர் வெற்றி பெற்றாலும், அவற்றில் அவர் உறுதியாக இருக்கவில்லை. 

சிலி கம்யூனிஸ்ட் கட்சியின் பலம் நாடாளு மன்றத்தில் அதிகரித்துள்ளது. 12 உறுப்பினர்கள் என்றாலும், கூட்டணியில் அதிக எண்ணிக்கை யைக் கொண்டதாக இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரும், ரெகொலேடா நகரின் மேயருமான டேனியல் ஜாட்யூ மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராக உள்ளார். கூட்டணி சார்பில் போரிக்கை நிறுத்த மற்ற கட்சிகள் பரிந்துரைத்ததால், ஜனாதிபதித் தேர்த லில் ஜாட்யூ நிற்கவில்லை. அந்த முடிவை எடுக் கும்வரையில் நடத்தப்பட்ட அனைத்துக் கருத்துக் கணிப்புகளிலும் ஜாட்யூ தான் முன்னணியில் இருந்தார். கடிவாளத்தை கம்யூனிஸ்ட் கட்சி சரியாகக் கையாளும் என்று எதிர்பார்க்கலாம்.

தென் அமெரிக்க அரசியல் சிவப்பாக மாறிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே இருக்கும் இடதுசாரி நட்சத்திரங்களில் மேலும் ஒரு நட்சத்தி ரமாக சிலியும் ஜொலிக்கிறது. வரும் நாட்களில் மேலும் சில நட்சத்திரங்கள் ஜொலிக்கப் போவது உறுதி.

;