headlines

‘இந்தியா’வுக்கு கிடைத்த இனிப்பான செய்தி

தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 தொகுதிக ளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான  வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் தமிழ் மண்ணில் மதவெறி, சாதிவெறி மற்றும் சந்தர்ப்பவாதக் கூட்ட ணிகளுக்கு இடமில்லை என்ற தெளிவான செய்தி தேசத்திற்கு தரப்பட்டுள்ளது. இந்தியா அணி தமிழ்நாடு மற்றும் புதுவையில் முழு மையான தேர்ச்சியை பெற்றுள்ளது.

மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி ஆகிய உயரிய விழுமியங்களை மீண்டும் ஒரு முறை தமிழ்நாடு மற்றும் புதுவை உயர்த்திப் பிடித்துள்ளன. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கிய வாக்காளர்கள் போற்று தலுக்குரியவர்கள். 

அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணிகள் தீர்மானகரமாக நிராகரிக்கப்பட்டுள் ளன. பாஜக அமைத்த கூட்டணி மதவாத அணி யாக மட்டுமின்றி சாதிய சக்திகளின் கூட்டணியாக வும் இருந்தது. இது மண்ணைக் கவ்வியுள்ளது.

கடந்த பத்தாண்டு காலமாக நரேந்திர மோடி தலைமையிலான அனைத்து மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும் காவடி தூக்கிவிட்டு கடைசி நேரத்தில் பாஜக விடமிருந்து விலகுவதாக அதிமுக நாடகமாடி யது. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜ கவை விமர்சிக்கக் கூட அதிமுக அணி தயங்கி யது. இந்த சந்தர்ப்பவாத நிலைபாட்டை தமிழக மக்கள் நிராகரித்துள்ளனர். 

முதல் கட்ட தேர்தல் நடந்த தமிழ்நாட்டிற்கு மோடி மற்றும் அமித்ஷா வகையறா அடிக்கடி விஜயம் செய்தது. ரோடு ஷோ நடத்திப் பார்த் தார்கள். ஆனால் இயற்கைப் பேரிடருக்கு நிவாரண நிதி வழங்க மறுத்தது, நீட் தேர்வுக்கு விலக்களிக்க மறுத்தது, மதுரை எய்ம்ஸ் மருத் துவமனை கட்டுமானப் பணியை இழுத்தடித் தது, கீழடி அகழ்வாய்வில் ஒன்றிய அகழ்வாய்வுத் துறை மண் அள்ளிப் போட்டது போன்ற நயவஞ்சக நடவடிக்கைகளுக்கு தங்கள் வாக்குரிமையின் மூலம் தமிழ்நாட்டு மக்கள் பதிலளித்துள்ளனர். 

எனினும் கடந்த தேர்தல்களோடு ஒப்பிடும் போது பாஜக அணியின் வாக்கு சதவீதம் அதிக ரித்துள்ளது. அதில் கூட்டணி கட்சிகளின் வாக்கு களும் உள்ளன என்ற போதும், தமிழ்நாட்டில் உள்ள மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் மேலும் விழிப் போடும், ஒருங்கிணைப்போடும் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. அதிமுகவின் வாக்கு சதவீதத்திலும் சரிவு ஏற்படவில்லை என்பதை மனதில் கொண்டு வியூகங்களை வகுக்க வேண்டும். 

தமிழ்நாடு தொடர்ந்து முன்வைத்து வரும் சமூக நீதி இந்த முறை ஒட்டு மொத்த இந்திய தேர்தல் களத்தின் பேசு பொருளானது குறிப்பி டத்தக்க ஒன்று. சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட சமூக நீதி சார்ந்த பிரச்சனைகளிலும் தமிழகம் மற்றும் புதுவையிலிருந்து நாடாளுமன்றம் செல் லும் உறுப்பினர்கள் மீண்டும் உறுதிமிக்க குரல் எழுப்புவார்கள் என்பது உறுதி.

;