தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழ்வதும், உரிமைகள் தடையின்றி கிடைப்பதும், அவர்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சி பெறுவதும் அவசியம். இதைக் கருத்தில் கொண்டும், குழந்தை களின் ஊட்டச்சத்து, கல்வி, மருத்துவம், பாலியல் பாகுபாடின்மை, பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை - 2021’’ வெளியிடப்பட்டுள்ளது.
18 வயது நிரம்பாத அனைவரும் குழந்தை கள்; அக்குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டும் என்றும் அனைத்து விஷயங்களி லும், குழந்தைகள் தங்களின் கருத்துகளை வெளி யிட உரிமை உண்டு என்றும் அவ்வாறு கருத்துக் களை வெளிப்படுத்தும் குழந்தைகளுக்கு பாது காப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆண், பெண் குழந்தைகள் பாதுகாப்பான சூழலில், தங்களின் முழுத் திறனையும் அடையும் வகையில், அவர்களின் வளர்ச்சியை உறுதி செய் வதும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை நிறை வேற்றுவதும், குழந்தைகளின் ஒட்டுமொத்த மேம் பாட்டுக்கு அவசியம் என்பதையும் மாநில அரசின் கொள்கை வலியுறுத்துகிறது. பள்ளிகளில் சில ஆசி ரியர்களால் குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களை விசாரிக்க அனைத்து பள்ளி களிலும் புகார் குழு அமைக்கவேண்டும் என்ற மாதர், மாணவர் அமைப்புகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் சமூகநலத் துறையின் அரசாணையின்படி, ஊரகப் பகுதிகளில் கிராம அளவிலும் ஊராட்சி ஒன்றிய அளவிலும் மாவட்ட அளவிலும் குழந்தை பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களின் நலன் பாதுகாக்கப் படவேண்டும். நகரப்பகுதிகளில் பேரூராட்சி அள விலும் நகராட்சிகளிலும் மாநகராட்சிகளில் வார்டு அளவிலும் குழந்தை பாதுகாப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்படவேண்டும்.
அண்மைக்காலமாக சேலம், தருமபுரி, கிரு ஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் சிறுவர் - சிறுமிகளுக்கு எதிரான குற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சிறுமிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு ள்ளனர். ஊரடங்கு காலத்தின் போது பள்ளிகளில் வகுப்புகள் நடக்காததால் இடைநிற்றல் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பள்ளிகளு க்குப் பெண் குழந்தைகள் செல்லாத நிலையில், எட்டு-ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு திருமணங்கள் நடத்தப்படுகிறது. இதனால் இளம் வயதிலேயே தாய்மை அடைகின்றனர்.
இப்பிரச்சனைகளில் தலையிட்டுத் தீர்வுகாண ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் பாது காப்பு அமைப்பு இருந்தாலும் அந்த அமைப்பில் நிரந்தர பணியாளர்கள் இல்லை. மாநிலத்தில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்களாக உள்ளவர்களில் 16 பேர் மட்டுமே நிரந்தர பணி யாளர்கள். பல மாவட்டங்களில் தற்காலிக பணியா ளர்களே குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களாக உள்ளனர். இவர்கள் ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர். ஓராண்டுக்குப் பின்பு பணி நீட்டிக்கப்படுமா என்ற கேள்வியுடனே பணியில் இருக்கின்றனர். எனவே இவர்கள் நிம்மதியாக பணிபுரியும் சூழலை உறுதிப்படுத்துவதும் பணிநிரந்தரப்படுத்துவதும் அவசியம். மேலும் மாநில அளவிலான குழந்தை கள் நல ஆணையத்தில், சட்டத்தை அறியாதவர் களே புகார்களை விசாரிக்கும் நிலையில் உள்ள னர். இந்த குறைகளையும் மாநில அரசு களைவ தோடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணை யத்தில் புகார்களை விசாரிக்கத் தனிப் பிரிவை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.