தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக தமிழ் அறி ஞர்கள் ஆன்மீக ஆர்வலர்களை கொண்ட குழுவை அமைக்குமாறு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
கரூரைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் தாக் கல் செய்த மனுவில் தமிழ் சைவ ஆகம விதிகளின் படி தேவாரம், திருவாசகம் போன்றவற்றை வாசித்து குட முழுக்கு நடத்த வேண்டுமென கோரியிருந்தார்.
இந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவில் உலகில் உள்ள மொழிகளிலேயே தமிழ் மொழிதான் தொன்மையான மொழி என அறி வியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என கருத்து தெரிவித்ததோடு தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக குழு ஒன்றை அமைக்க கூறியது.
இதன்படி கோவில்களில் தமிழில் குட முழுக்கு நடத்துவது தொடர்பாக பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், போரூர் ஆதீனம் சாந்த லிங்க மருதாச்சல அடிகளார், சிரவை குமரகுரு பர சாமிகள், மு.பெ.சத்தியவேல் முருகனார், ப.குமர லிங்கனார் ஆகியோர் கொண்ட குழு உருவாக் கப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக இதற்கான கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டு முதல் கூட்டம் நெல்லையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத் தில் பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த வர்கள் கலந்து கொண்டு வன்முறையில் ஈடுபட் டுள்ளனர். தமிழில் குடமுழுக்கு நடத்தக்கூடாது, சமஸ்கிருதத்தில் தான் நடத்த வேண்டும் என அடாவடியில் ஈடுபட்டு எதிர்த்தரப்பு கருத்து கூறிய வர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மாற்று கருத்து இருக்குமா னால் அதை முறைப்படி தெரிவிக்கலாம். ஆனால் கருத்துக் கேட்புக்காக கொடுக்கப்பட்ட படிவங் களை கிழித்தெறிந்து தங்கள் ஆத்திரத்தையும், ஆதிக்கத் திமிரையும் வெளிப்படுத்தியுள்ளனர் இந்து முன்னணி மற்றும் பாஜகவினர்.
பிரதமர் மோடி தமிழின் மேன்மை குறித்து பேசு வதெல்லாம் வெறும் வெளிவேசம். சமஸ்கிருத மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி தமிழ் உள்ளிட்ட மொழிகளை அனைத்துத் துறைகளிலும் ஒழித்துக் கட்டுவதே அவர்களின் நோக்கம் என்பது இந்தக் கூட்டத்திலும் வெளிப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்ற ஆன்மீகப் பேச்சாளர் சுகிசிவத்தை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி யுள்ளனர் பாஜகவினர். ஆன்மீகவாதியான அவர் முன்வைக்கும் மதநல்லிணக்க, மக்கள் ஒற்றுமை கருத்துகள், சனாதன கும்பலுக்கு எட்டிக்காயாய் கசக்கிறது. தமிழை முன்னிறுத்தும் சைவ மடாதி பதிகளையும் அவர்கள் மதிப்பதில்லை. இவர்க ளது சலசலப்பை பொருட்படுத்தாமல் தமிழ்நாடு அரசு தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான நெறிமுறை களை நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் உரு வாக்க வேண்டும். தமிழ் மொழி விரோதிகளான பாஜக கூட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.