நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மத்திய புலனாய்வு அமைப்புகளை தன்னு டைய அரசியல் லாபத்திற்காகவும், எதிர்க்கட்சி களை பழி வாங்குவதற்காகவும் பயன்படுத்தி வரு வது கண்கூடு. தங்களுடைய நோக்கத்திற்கு ஒத்துழைப்பவர்களை மட்டுமே அந்நிறுவனங்க ளின் உயர் பொறுப்புகளில் நியமிப்பதும், அவர்க ளுக்கு விதி முறைகளுக்கு மாறாக பணி நீட்டிப்பு வழங்குவதும் வழக்கமான நடைமுறை யாகவே மாறிவிட்டது.
ஒன்றிய அரசினால் மிகவும் தவறாகப் பயன் படுத்தும் அமைப்பாக அமலாக்கத்துறை மாற்றப் பட்டுவிட்டது. அமலாக்கத்துறை இயக்குநராக சஞ்சய்குமார் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியது சட்ட விரோதமானது என்று உச்சநீதி மன்றம் இடித்துரைத்துள்ளது.
இவருக்கு விதிகளை வளைத்து முன்று முறை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அம லாக்கத்துறையின் சமீப காலத்திய செயல்பாடு களை கவனிக்கும் போது இவருக்கு வழங்கப் பட்ட பணி நீட்டிப்புக்கான காரணம் என்ன என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
தங்களுடைய கட்டளைக்கேற்ப செயல்படும் நபர்களை தொடர வைப்பதற்காகவே சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குநர்களின் பதவிக் காலத்தை இரண்டு ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாக மோடி அரசு அதிகரித்தது.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொ டர்பான வழக்கில் அமலாக்கத்துறை சுயேச்சை யாகவே செயல்படுகிறது என்றும், யாருடைய நிர்ப்பந்தத்திற்கும் அடிபணிவதில்லை என்றும் வாதிடப்படுகிறது. ஆனால் உண்மை நிலவரம் என்ன என்பதை சஞ்சய் குமார் மிஸ்ரா பதவி நீட்டிப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதிலி ருந்து புரிந்து கொள்ள முடியும்.
இந்நிலையில் அமலாக்கத்துறையிடம் மேலும் அதிகாரங்களை குவிக்கும் வகையில் நிதி மோசடி தடுப்புச் சட்ட வரம்புக்குள் ஜிஎஸ்டி நெட்வொர்க்கை சேர்க்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு உட்பட எதிர்க் கட்சி ஆளும் மாநில அரசுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் 66ஆவது பிரி வின் கீழ் சில மாற்றங்களைச் செய்து தேசிய புலனாய்வு முகமை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் 15 விசாரணை அமைப்புகள் நிதிமோசடி தடுப்புச் சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த அமைப்புகள் அமலாக்கத்துறை யிடம் தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது. பழி வாங்கும் நடவடிக் கையை மேலும் விரிவுபடுத்தவே இந்த மாற்றம் உதவும்.
அமலாக்கத்துறை உள்ளிட்ட அனைத்து ஒன்றிய புலனாய்வு முகமைகளும் சுதந்திரமாக வும், சுயேச்சையாகவும் செயல்பட வேண்டியது அவசியம். இதைத்தான் உச்சநீதிமன்றம் மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியுள்ளது.