படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கே இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இங்குப் படித்து பட்டம் பெறு பவர்கள் அறிவில் சிறந்தவர்களாக கருதப்படு கின்றனர். பல சாதனைகளையும் புரிந்து வருகின்ற னர். ஆனால் அதே கல்வி நிறுவனங்களில் பயிலும் சிலர் தற்கொலை செய்துகொண்டு உயி ரையே மாய்த்துக் கொள்கின்றனர். இந்த முரண் பாடு முன்னெப்போதும் இல்லாத அளவு தற்போது அதிகரித்திருக்கிறது.
கடந்த 2 மாதங்களில் சென்னை ஐஐடியில் இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதே போன்று கடந்தாண்டு கோட்டா ஐஐடியில் ஒரே மாதத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். 2014 முதல் 2021 வரை யிலான 7 ஆண்டுகளில் மட்டும் ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் 122 மாண வர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் பட்டியல் மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் 71 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனங்களில் இருவகையில் தற்கொலைகள் முன்னுக்கு வருகிறது. ஒன்று எல்லா மாணவர்களும் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் படிக்க வருவதில்லை. குடும்ப கவுரவத்திற்காகவும், பெற்றோர்களின் வற்புறுத்த லுக்காகவும், பயிற்றுவிக்கப்பட்டுப் படிக்க வரு கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பாடத்தை மட்டுமே படித்தவர்கள், சமூகத்தைப் படிக்காதவர்கள். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிறிய பிரச்சனையைச் சந்திக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இன்னொருபுறம் சமூகத்தில் பின்தங்கிய பகுதியில் பிறந்து, ஏராளமான அவமானங்களைச் சந்தித்து சிலர் மட்டுமே இடம் பிடிக்கின்றனர். ஆனால் அவர்கள் மீது இட ஒதுக்கீட்டில் வந்த வர்கள், தகுதியற்றவர்கள் என முத்திரை குத்தப்படு கிறது. தொடர்ந்து அவமதிப்பிற்கு உள்ளாக்கப்படு கின்றனர். இந்நிலையில் அந்த சூழலில் நமக்கு உதவி செய்ய ஆட்களே இல்லை. தன்னால் இதைத் தீர்க்க முடியாது. இந்த சமூகம் நம்மை வாழவே விடாதோ என்ற உணர்வில் தற்கொலை செய்கின்றனர்.
சென்னை ஐஐடியில் சாதி ரீதியாக நிலவும் தீண் டாமை குறித்து ஆய்வு செய்த தேசிய எஸ்சி ஆணைய உறுப்பினர் சுவராஜ் வித்வான், “ ஐஐடி யில் நடக்கும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன் கொடுமைகள் காரணமாக 2007 முதல் 2017 வரை 17 தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். மேலும், தாழ்த்தப்பட் டோர் மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட மாணவர்க ளும் உடல் மற்றும் மன ரீதியாகத் துன்புறுத்தப்படுவ தாக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தரப்பிலி ருந்து புகார்கள் வந்துள்ளன” என்று தெரிவித்தி ருக்கிறார்.
அப்படியென்றால் இன்றும் உயர் கல்வி நிறு வனங்களிலும் சனாதன புதரில் தீண்டாமை ஆழ வேரூன்றியிருக்கிறது. இதனை வேரோடும் வேரடி மண்ணோடும் அகற்றிட வேண்டும். அப்போது தான் ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்கள் உண்மையான “உயர்” கல்வி நிறுவனங்களாக விளங்கும்.